திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வேலைக்காரனை தொடர்ந்து முடிவுக்கு வரும் அடுத்த விஜய் டிவி சீரியல்.. 469-வது எபிசோடை கடந்த சீரியலாச்சே

சமீபத்தில் விஜய் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தை  போலவே  ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த  வேலைக்காரன் சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது மற்றுமொரு சீரியல்  விஜய் டிவியில் நிறைவடையவுள்ளது. சூப்பர் ஹிட் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றி பெற்ற சீரியல் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’.

இந்த சீரியலின் முதல் பாகம்  ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாவது பாகம்  தற்போது வரை 469-வது எபிசோடை கடந்து ரசிகர்கள் விருப்பமாக பார்க்கக்கூடிய சீரியல்களின் லிஸ்டில் உள்ளது. இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக மாயமாக நடிக்கும் செந்தில் பாலாஜி மற்றும்  இந்த சீரியலின் கதைக்களம்.

இன்னிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளதால், இறுதி அத்தியாயத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கடைசி நாளன்று  நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் குழுவினர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடும் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வீடியோ வைரலாக பரவுகிறது.

இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்கள் வரிசையாக அரங்கேறி இருக்கும் நிலையில், மாயனின் தங்கை சரண்யா, மகேந்திரன் உடன் நடக்க இருந்த திருமணம் நின்று, பாண்டியனுடன் நடந்துள்ளது. அதைப்போன்றே தாமரையை மாறன் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள தயாராகிறான்.

மகா-மாயம் இருவருக்கும் குழந்தை பிறக்கப் போகிறது. காதல் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா-கார்த்திக் இருவரையும் அவர்களது குடும்பம் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி இந்த சீரியலில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சினை எல்லாம் ஒன்றொன்றாக சரி செய்யப்பட்டு வருகிறது.

மீதமிருக்கும் கத்தி-காயத்ரி இருவரும் ஒன்று சேர்வது, நாச்சியார்-சாரா இடையேயான பிரச்சனை முடிவுக்கு எட்டுவது, அதன்பிறகு மாயனும் மாறனும் சேருவது என இவற்றிற்கு மட்டும் பதில் அடுத்த வார கிளைமேக்ஸ் எபிசோடில் தெரியவரும்.

Trending News