Vijay Tv: சன் டிவி சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி தொடர்ந்து எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆனாலும் சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு விஜய் டிவியில் போட்டி போட முடியவில்லை.
காரணம் சன் டிவி சீரியலில் ஏதாவது ஒரு நாடகம் மக்களிடம் வரவேற்பை பெறாமல் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி விட்டால் உடனே அந்த சீரியலை தூக்கி அதற்கு பதிலாக புது சீரியலை கொண்டு வந்து விடுவார்கள்.
இதுதான் சன் டிவி சீரியலின் வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ரூட்டையே ஃபாலோ பண்ணும் விதமாக விஜய் டிவியும் புத்தம் புது சீரியல்களை கொண்டு வரப் போகிறார்கள்.
அந்த வகையில் தற்போது கதையே இல்லாமல் மட்டமாக ஓடிக் கொண்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். இந்த சீரியல் இந்த மாத இறுதிக்குள் முடியப்போகிறது.
அதே மாதிரி விஜய் டிவி சீரியல் ஹீரோ திரவியம் நடித்துவரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் மோசமான புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த சீரியலையும் முடிவு கட்ட போகிறார்கள்.
பிக்பாஸ் முடியும் போது இந்த சீரியலையும் முடித்துவிட்டு அதற்கு பதிலாக புத்தம் புது சீரியல்கள் வரப்போகிறது. அது என்னென்ன சீரியல் என்றால் திரவியம் புதுசாக சிந்து பைரவி என்ற சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக சிந்து மற்றும் பைரவி என்ற கேரக்டரில் இரண்டு ஹீரோயின்கள் கமிட் ஆகியிருக்கிறார்கள். இதில் மௌன ராகம் சீரியலில் நடித்த ரவீனா மற்றும் தெலுங்கு சீரியல் ஹீரோயின் நடிக்கப் போகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மோதலும் காதலும் சீரியலில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த சமீர் புதுசாக கமிட்டாய் இருக்கும் பூங்காற்று திரும்புமா என்ற நாடகம் பிக் பாஸ் முடிந்தவுடன் ஒளிபரப்பாக போகிறது.
இதில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்து போன முத்தழகு சீரியலில் நடித்த முத்தழகு தான் கமிட் ஆயிருக்கிறார்.
அடுத்ததாக சன் டிவியில் எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் பிரபலமான மதுமிதா என்கிற ஜனனி விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற நாடகத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக விஜய் டிவி சீரியல் ஹீரோ முன்னா என்ற நடிகர் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் இந்த மூன்று சீரியல்களும் புத்தம் புதுசாக ஒளிபரப்பாக போகிறது.