திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

சிங்கப்பெண்ணில் மகேஷ் மனம் மாறும் நேரத்தில் இடியாய் வந்திறங்கும் செய்தி.. மீண்டும் அன்பு-ஆனந்திக்கு வரும் ஆப்பு

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷ் உயிருக்கு ஆபத்து வந்து, அந்த பழி அன்பு மீது விழுந்தது சீரியல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அன்பு ஜெயிலுக்குள் இருக்கும் எபிசோடை இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இதை ஒரு சில எபிசோடுகளிலேயே முடித்து வைத்து விட்டார் இயக்குனர்.

அன்பு-ஆனந்திக்கு வரும் ஆப்பு

ஜெயிலில் இருந்து தப்பித்து போகும் அன்பு திருமூர்த்தியை அடி வெளுத்து விடுகிறான். இன்றைய ப்ரோமோவில் அவனை கொலை செய்யவே துணிவது போல் காட்டப்படுகிறது.

ஆனால் ஆனந்தி அன்புவை தடுத்து விடுகிறாள். அதே நேரத்தில் மகேஷ் மற்றும் அவளுடைய அப்பா அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.

அரவிந்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் போலீஸ் ஸ்டேஷனில் நிற்கிறான். அப்போது அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் திருமூர்த்தி உடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.

அன்பு தன்னை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என மகேஷ் மனம் மாறுகிறான். அதே நேரத்தில் தில்லைநாதன் கம்பெனியின் வண்டியை பயன்படுத்தி போதை பொருள் கடத்தப்பட்டிருப்பது மகேஷ் மற்றும் தில்லைநாதனுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைகிறது.

திருமூர்த்தி அரவிந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என வாயை திறந்து சொல்வானா என்பது சந்தேகம்தான். போட்ட திட்டத்திலிருந்து தப்பித்து, கடத்தல் வரைக்கும் வெளியில் கொண்டு வந்ததால் இனி அரவிந்தால் அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் பெரிய ஆபத்து காத்திருப்பது நிச்சயம்.

Trending News