வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சசிகலாவை தொடர்ந்து அமமுக-விலிருந்து வெளியேறிய மற்றொரு விக்கெட்! அடுத்தடுத்து அதிமுகவில் தாவத் தயாராகும் அமமுகவினர்!

நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏனென்றால் தற்போது அமமுக கட்சியின் கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன்,

அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். ஆகையால் சீனிவாசன் அமமுகவில் இருந்து வெளியேறிய முதல் விக்கெட் என்பதால்,

தேர்தல் நடைபெறுவதற்குள்ளே இன்னும் யார் யார் அந்தக் கட்சியில் விலகுவார்கள்? என்பது குறித்து கட்சிகளிடையே அச்சம் நிலவி வருகிறது.

srinivasan

ஏற்கனவே அதிமுக கட்சியின் ஆணிவேராக கருதப்பட்ட சசிகலாவும் இரவோடு இரவாக அரசியலை விட்டு விலக போவதாக அறிவித்ததும், அமமுக கட்சிக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது.

அதைப்போல் அமமுக கட்சி, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போதுவரை வெளியாகவில்லை.

ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும் அமமுக கட்சி, வேறு ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News