வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் கதையை ஓப்பனாக பேசிய அன்சிதா.. 2 வருஷமா காதலித்து குட்பாய் சொன்ன கேடி

Vijay Tv Bigg Boss 8 Tamil: சுனிதாவின் எலிமினேஷனுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் கிட்டத்தட்ட 20 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். அதில் இந்த வாரம் 13 போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் கருத்து கணிப்பின்படி சாச்சனா, ரியா, ராணவ், வர்ஷினி இவர்களுக்கு தான் ஓட்டு கம்மியாக இருக்கிறது. அதனால் வர்ஷினி இந்த வாரம் வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் போன அன்சிதா மற்றும் அர்னாவ் பார்த்து இங்கேயும் வந்து விட்டார்களா, என்று முகம் சுளிக்கும் அளவிற்கு தான் இவர்கள் வெளியே கெட்ட பெயர் எடுத்துட்டு போய் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர்கள் இருவரும் செல்லமா சீரியலில் கிட்டத்தட்ட இரண்டு வருஷமாக நடித்து வந்தார்கள். அப்படி நடித்த பொழுது இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கத்தினால் அர்னாவ், முன்னாள் மனைவி திவ்ய ஸ்ரீதர் ரொம்பவே பாதிப்புக்கு ஆளானார்.

அதாவது நிறைமாதம் கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு சித்திரவதை பண்ணி இருக்கிறார். நீ என்னுடைய மனைவியும் இல்லை, உன்னிடம் குழந்தைக்கு நான் அப்பாவும் இல்லை என்பதற்கு ஏற்ப தகாத வார்த்தைகளால் பேசி காயப்படுத்தி இருக்கிறார். இவருடன் சேர்ந்து அன்சிதாவும், திவ்யாவை கெட்ட வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி பேசி இருக்கிறார்.

அப்படி இவர்களுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்து சோசியல் மீடியாவில் பரவி அர்னவ் ஜெயிலுக்கு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதனால் அன்சிதா மற்றும் அர்னாவ் பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் முன் மக்களிடம் அதிக கெட்ட பெயர்களை சம்பாதித்து தான் போயிருக்கிறார். அதனாலேயே அர்னாவ் போன வேகத்தில் மக்கள் வெளியே அனுப்பி விட்டார்கள்.

இதற்கு அடுத்தபடியாக அடுத்த டார்கெட் அன்சிதா தான் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவருக்கு முன்னதாக அங்கு நிறைய டம்மி பிஸ்கள் இருந்ததால் அவர்களில் ஒருவர் ஒருவராக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இடையில் அன்சிதாவின் பேச்சு நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அன்சிதா பொறுத்தவரை ஜெயிக்க வேண்டும் என்பதை விட தனக்கு இருக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை தகர்த்து எறிய வேண்டும் என்பதற்கு ஏற்ப விளையாடி வருகிறார். இந்த சமயத்தில் நேற்று பவி முத்துக்குமரன் இருக்கும் பொழுது அன்சிதா அவருடைய காதல் விஷயங்களை பற்றி சொல்கிறார். அப்படி சொல்லும் போது இரண்டு வருஷமாக நானும் அவரும் காதலித்து வந்தோம்.

ஆனால் திடீரென்று ஒரு மாதத்திற்கு முன் அவர் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டார். ஆனால் முழுக்க முழுக்க அவர் மீது தவறு சொல்வதைவிட என் மீது தவறு இருக்கு என்று நான் பீல் பண்ணுகிறேன். அவருக்கு கிடைக்க வேண்டிய அன்பு என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று தோன்றுகிறது.

இருந்தாலும் நான் இப்பொழுது வரை அவரை காதலிக்கிறேன். இந்த வீட்டுக்கு வருவதற்கு முன் கூட என்ன வேணாலும் நடக்கட்டும் நம்ம போயி பார்த்துட்டு வரலாம் என்ற ஒரு நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன் என்று அவருடைய காதல் தோல்வியான விஷயங்களைப் பற்றி சொல்கிறார். இவர் சொல்லும் பொழுது எல்லாம் அர்னாவ் உடன் சேர்ந்து அன்சிதா, திவ்யாக்கு செஞ்ச துரோகம் தான் ஞாபகம் வருகிறது.

ஒருவேளை திவ்யாக்கு செஞ்ச துரோகம் தான் தற்போது அன்சிதா காதலில் ஏமாற்றம் அடைந்து நிற்பது போலும் இருக்கிறது. இதுதான் கர்மா என்று சொல்வார்கள். ஆனால் அர்னாவ் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் திவ்யாவையும் ஏமாற்றி தற்போது அன்சிதவையும் ஏமாற்றி கேடி வேலையை பார்த்திருக்கிறார். இதில் மூன்றாவது பெண்ணாக இன்னொரு பெண்ணையும் காதலித்து வருவதாக அன்சிதா கூறுகிறார்.

Trending News