விஜய் டிவி சீரியலில் இருந்து பாதியிலேயே போன ஹீரோயின்.. மீண்டும் அதே கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுக்கும் அனு

Vijay tv Serial: விஜய் டிவி மக்களிடம் ஒரு நீங்காத இடத்தை பிடித்து விட்டது. அதற்கு காரணம் ரியாலிட்டி ஷோ, மக்களை பொழுதுபோக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவதால் விஜய் டிவி சேனல் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் எக்கச்சக்கமான சீரியல்களையும் கொண்டு வந்து குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு இடத்தை தக்க வைத்து விட்டது.

அதனால் விஜய் டிவியில் சின்ன கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் மக்களிடம் ஈசியாக பிரபலமாகி விடுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் பிரேம் டைம் சீரியல் மூலம் செகண்ட் ஹீரோயினாக நடித்த சாய் காயத்ரி நடிப்பால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறார். அதிலும் ஈரமான ரோஜா சீரியல் ஆண்டாள் கதாபாத்திரம் மூலம் அனைவரையும் சொக்க வைத்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் நீ நான் காதல் என்ற சீரியலில் ஆகாசுக்கு ஜோடியாக அனு என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சாய் காயத்ரி நடித்து இவர்கள் இரண்டு பேருடைய ஜோடியும் மக்களை ஈர்த்தது. ஆனால் திடீரென்று சாய் காயத்ரியின் உடல்நிலை கொஞ்சம் சரியில்லாத பட்சத்தில் சீரியலில் இருந்து அவசரமாக பாதியிலேயே வெளியேறி விட்டார்.

அந்த வகையில் சாய் காயத்ரிக்கு பதிலாக அணு கதாபாத்திரத்தில் அக்ஷிதா என்பவர் நடித்து வருகிறார். ஆனால் இவர் அணு கதாபாத்திரத்தில் தற்காலிகமாக தான் நடித்து வந்திருக்கிறார். ஏனென்றால் மறுபடியும் அணு கதாபாத்திரத்தில் சாய் காயத்ரியை நடிக்க வரப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. பாதியிலேயே போன சாய் காயத்ரி மீண்டும் அதே கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

இதனால் ஆகாஷ் மற்றும் அனுவின் ரசிகர்கள் நிச்சயம் இவர்களை மறுபடியும் தூக்கிக் கொண்டாடும் வகையில் காட்சிகள் அமையப்போகிறது. பொதுவாக ஒரு கேரக்டரில் இருந்து விலகி விட்டால் அந்த கேரக்டருக்கு புதுசாக வருபவர் தான் தொடர்ந்து நடித்து முடிப்பார். ஆனால் சாய் காயத்ரி பொறுத்தவரை அணு கேரக்டருக்கு மறுபடியும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Leave a Comment