குணச்சித்திர நடிகையாகவும் தொகுப்பாளராகவும் ரசிகர்களை கவர்ந்த அனுஹாசன் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட விவாகரத்து பற்றி வாய் திறந்துள்ளார்.
நிறைய பேருக்கு அனுஹாசன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிய வாய்ப்பில்லை. இந்நிலையில் அவர் தன்னுடைய முதல் விவாகரத்து பற்றி கூறியதே அனைவருக்கும் அதிர்ச்சி தான். விவாகரத்திற்கு இப்படியெல்லாம் கூட காரணம் இருக்குமா எனும் அளவுக்கு ஒரு விவாகரத்து.
டெல்லியைச் சேர்ந்த விகாஸ் என்பவரை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனுஹாசன். ஆனால் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய முதல் காதல் கணவரை விவாகரத்து செய்த காரணத்தைப் பற்றி கூறியுள்ளார் அனுஹாசன். காதலிக்கும்போது அன்பாக இருந்ததாகவும், திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

என்ன சண்டை வந்தாலும் எப்படியாவது கணவருடன் காலத்தை ஒட்டி விட வேண்டும் என நினைத்ததாகவும், ஒரு கட்டத்தில் முடியாது என்று தெரியவந்தவுடன் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு பண்ணி விட்டாராம்.
இருந்தாலும் என் முதல் கணவர் நல்லவர், ஆனால் சுத்தமாக எனக்கு செட்டாக மாட்டார் என கூறியுள்ளார். இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது குடும்பம் குட்டி என சந்தோசமாக வாழ்ந்து வருகிறாராம்.