வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அன்று லிப் லாக் காட்சிக்கு நோ சொன்ன அனுபமா.. இன்று பளிச்சின்னு உதடு முத்தம் கொடுக்க இதான் காரணமாம்

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

சுருள், சுருளான அவருடைய நூடுல்ஸ் முடியும், கொள்ளை அழகும் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் தெலுங்கு ரீமேக்கிலும் அனுபமா நடித்தார். அதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

இதனால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அனுபமா தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் சமீபத்தில் ரவுடி பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஹீரோ ஆஷிஸ் ரெட்டியுடன் அனுபமா நெருக்கமான ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஹீரோ, ஹீரோயின் இருவரும் லிப் லாக் செய்வது போன்ற அந்த காட்சி தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்த அனுபமா சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார். இருப்பினும் அவரை இது போன்ற நெருக்கமான ரொமான்ஸ் காட்சியில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆரம்பத்தில் அனுபமா இந்த லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் இந்த ஒரு காட்சியில் நடிப்பதற்கு மட்டும் 50 லட்சம் தனியாக சம்பளம் வழங்குவதாக கூறியுள்ளார். இதையடுத்து அனுபமாவும் இந்த காட்சியில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒரு ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதற்கு 50 லட்சம் சம்பளமா என்று வியப்பாக இருந்தாலும் தெலுங்கு சினிமா பக்கம் இதெல்லாம் ரொம்பவும் சகஜம். இதன் காரணமாகவே தமிழில் குடும்ப பாங்காக நடிக்கும் பல நடிகைகளும் தெலுங்கில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றனர்.

Trending News