புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இளம் நடிகரை காதலித்து ஏமாந்த அனுபமா பரமேஸ்வரன்?ஊர் சுத்துனதுலாம் பொய்யா கோபால்!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் கொடி எனும் படத்தில் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் அவருக்கு பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து தற்போது அங்கேயே செட்டில் ஆகும் அளவுக்கு படவாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இளம் நடிகர்களின் பெரும்பாலான படங்களில் அனுபமா பரமேஸ்வரன் தான் பிரதான கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். அதேபோல் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

இந்நிலையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தற்போது யாரையும் காதலிக்கவில்லை எனவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது வெளியானதிலிருந்தே கோலிவுட்டில் சலசலப்புகள் கிளம்பின.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுபமா பரமேஸ்வரன் பிரபல தயாரிப்பாளர் மகனும் நடிகருமான ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் இரவு நேரங்களிலும் வெளிநாடுகளிலும் ஊர் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஒருவேளை அந்த நடிகர் தான் அனுபமா பரமேஸ்வரனை ஏமாற்றி விட்டாரோ என அக்கட தேசத்தில் கசிந்த செய்தி தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

anupama-parameshwaran-cinemapettai
anupama-parameshwaran-cinemapettai

Trending News