சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முதல்முறையாக லிப் கிஸ்சில் தெரிக்கவிட்ட அனுபமா.. வைரலாகும் ரவுடி பாய்ஸ் டிரைலர்

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் நயன்தாரா, அசின், சாய்பல்லவி இவர்களது வரிசையில் அனுபமா பரமேஸ்வரன் மாறிக் கொண்டிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி உடன் கதாநாயகியாக பிரேமம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி மலர் டீச்சராக சினிமா ரசிகர்களின் மனதில் அனுபமா பரமேஸ்வரன் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு இவர் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு அனுபமாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் படம் நின்னுக்கோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். இந்தநிலையில் தற்போது இணையத்தில் அனுபமா நடித்த தெலுங்கு படமான ‘ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தின் ட்ரைலர் ரிலீஸானது.

இதில் அனுபமா முதல் முதலாக படத்தின் ஹீரோவுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஏனென்றால் எப்பவுமே ஹோம்லி லுக்கில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இந்தப்படத்தில் மாடர்ன் உடையில் ஹாட்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாகொடுத்தது மட்டுமல்லாமல் இவர் நடித்திருக்கும் லிப்-லாக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர். அத்துடன் அனுபமா பரமேஸ்வரன் லிப்-லாக் கொடுத்த இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கு ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமாகியுள்ளார்.

எனவே அறிமுக கதாநாயகனுடன் அனுபமா பரமேஸ்வரி செய்த இந்த அட்டூழியம் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ரவுடி பாய்ஸ் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா பரமேஸ்வரன் லிப் லாக் கொடுத்த ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இதோ!

Trending News