தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.
தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்போது ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்ள நடிகைகள் புகைப்படம் வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தனர்.
அதுமட்டுமில்லாமல் அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.
இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இருந்தாலும் அந்த பிரபலம் பேச்சுக்கு பெரிதாக யாரும் சரியாக ரியாக்ட் செய்யாததால் அந்த விஷயம் காத்தோடு மறைந்தது.
இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? என கிண்டலடித்து வருகின்றனர்.
