ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

Anupama Parameswaran : தில்லு ஸ்கொயரில் காட்டிய கவர்ச்சி வீணா போகல.. நயன்தாரா லெவலுக்கு உயர்ந்த அனுபாமாவின் சம்பளம்

தமிழில் தனுஷின் கொடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் அனுபாமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தள்ளி போகாதே, சைரன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக அனுபமா தான் நடிக்கிறார்‌. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான தில்லு ஸ்கொயர் படத்திலும் நடித்தார்.

இதில் மிகவும் கவர்ச்சியாக மற்றும் நெருக்கமான காட்சியில் அனுபாமா நடித்திருந்தார். இதனால் போஸ்டர் வெளியான போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக தில்லு ஸ்கொயர் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட அனுபாமா கலந்து கொள்ளவில்லை.

சம்பளத்தை உயர்த்திய அனுபாமா பரமேஸ்வரன்

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு அனுபாமாவின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது. இவர் காட்டிய கவர்ச்சி வீண் போகவில்லை என்று தான் டோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

நயன்தாரா இப்போது ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவர் அளவுக்கு விரைவில் அனுபமாவும் முன்னேறிடுவார் போல. அதாவது தில்லி ஸ்கொயர் படத்திற்கு முன்னதாக ஒரு படத்திற்கு ஒரு கோடி மட்டும் சம்பளம் வாங்கி வந்தார்.

இப்போது சம்பளத்தை டபுள் ஆக்கி உள்ளார். அதாவது இரண்டு கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறாராம் அனுபாமா. இவருக்கு இருக்கும் மார்க்கெட்டால் தயாரிப்பாளர்களும் கேட்ட பணத்தை கொடுத்து அவரை புக் செய்து வருகிறார்கள்.

Trending News