புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரபல கிரிக்கெட் வீரருடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணம்? இணையத்தில் வளர்ந்த காதல்!

பிரபல கிரிக்கெட் வீரர் சமீபத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் போட்டியிலிருந்து விடுமுறை கேட்டு வந்ததும், அதே சமயம் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சமூக வலைதளங்களுக்கு விடுமுறை என குறிப்பிட்டுள்ளதும் எங்கேயோ இடிக்குதே என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும் பிரேமம் படத்தின் ரீமேக் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கே அனுபமாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழிலும் அனுபமாவுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரபல இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியது. மேலும் இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் பேசிக்கொண்ட பதிவுகளும் வைரலானது.

ஆனால் இருவருமே தங்களது காதலை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் இருவரும் காதலிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. இந்நிலையில் திடீரென பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியின் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து திருமணம் செய்யப் போவதாக கூறி விடுமுறை கேட்டு வந்துள்ளார்.

anupama-parameswaran-insta-post
anupama-parameswaran-insta-post

அதேசமயம் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டாகிராமுக்கு விடுமுறை என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பும்ரா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறை என பதவிட்டுள்ளது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

bumrah-cinemapettai
bumrah-cinemapettai

மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. என்னதான் கிசுகிசுக்கள் கிளம்பினாலும் இன்னும் ஒருசில தினங்களில் காதல் இருக்கிறதா? இல்லையா? என்ற உண்மை தெரியவரும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News