14 இயக்குனர்களும் 19 கேமராமேன்கள் பணியாற்றி சுயம்வரம் படத்தை எடுத்து முடித்தனர். ஒரே நாளில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனையில் இப்படம் இடம் பிடித்தது.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரபுதேவா, சத்யராஜ் மற்றும் குஷ்பூ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரபுதேவாவின் திரை வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தின் சாதனை மூலம் பிரபுதேவா பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
தற்போது வரை ஒரு சில இயக்குனர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டி வரும் நிலையில் 14 இயக்குனர்கள் இணைந்து ஒரு படத்தை இயக்கியிருந்தது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்துள்ளது. மேலும் ஒவ்வொரு இயக்குநரும் படத்திற்கு தேவையான கதையை மையமாக வைத்து காட்சிகளை அமைத்து இருந்தனர்.
![anuradha](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/10/anurha.jpg)
இப்படத்திற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதா அனைத்து நடிகர்களுக்கும் டப்பிங் செய்து உள்ளார். ரம்பா, குஷ்பூ, பிரீத்தா மற்றும் கதாநாயகர்கள் 4 பேர் உட்பட அனைவருக்கும் டப்பிங் செய்துள்ளார். இதுவரைக்கும் எந்த ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு டப்பிங் செய்ததில்லை ஆனால் முதல்முறையாக அனுராதா அதனை சாத்தியப்படுத்தி உள்ளார்.
மேலும் இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாநாயகிகளுக்கும் ஏற்றபடி அனுராதா குரலை அமைத்து டப்பிங் செய்துள்ளார். அப்போது ஒரே சீனில் 2 ஹீரோயின்களுக்கும் மாறி மாறி டப்பிங் செய்து உள்ளார். அப்போது அனுராதாவிற்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்தன.