புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இயக்குனருடன் சேர்ந்து தனுஷ் பட நடிகை 650 கோடி மோசடி.. அதிர்ச்சியில் சினிமா உலகம்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி தற்போது ஹிந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு கிட்டத்தட்ட 650 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது ஐடி ரைடில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆடுகளம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பெண்கள் புரட்சி சம்பந்தமாக தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் டாப்ஸி. தற்போது அவருக்கு சம்பளமும் தாறுமாறாக கிடைத்து வருகிறதாம்.

இந்நிலையில் டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் என்பவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 650 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

anurag-kashyap-tapsee-cinemapettai-01
anurag-kashyap-tapsee-cinemapettai-01

அனுராக் காஷ்யப் இமைக்காநொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தியில் பிரபல இயக்குனராக வலம் வரும் அனுராக் காஷ்யப் தற்போது டாப்ஸி உடன் சேர்ந்து சில படங்களில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திடீரென அனுராக் காஷ்யப் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி இருவரும் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பு பதுக்கி வைத்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் விசாரணைகள் முழுமை பெறாததால் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்களாம்.

Trending News