செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

படுத்த படுக்கையான அனுராக் காஷ்யப்.. கொரோனா விட்டாலும் இது விடாது போலருக்கு

பிரபல நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் சினிமாவில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பாலிவுட் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே அங்கு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

தமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம்தான் சுப்ரமணியபுரம். இப்படம் வெளிவந்த காலத்தில் பல மொழிகளிலும் படத்தை ரீமேக் செய்ய பலதரப்பினரும் முன்வந்தனர். இப்படத்திற்கான ஹிந்தி ரீமேக் உரிமை அனுராக் காஷ்யப் வாங்கி “கேங்ஸ் ஆப் வசிப்பூர்” எனும் பெயரில் படத்தை இயக்கினார்.

anurag-kashyap
anurag-kashyap

எப்படி தமிழில் சுப்பிரமணிய திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதே அளவிற்கு இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அனுராக் காஷ்யப் டாப்ஸியை வைத்து “டோபாரா” எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை வீட்டிலிருந்தே கவனித்து வந்த அனுராக் காஷ்யப்க்கு சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி வந்து உள்ளது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பரிசோதித்த பிறகு இவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைப்பற்றி அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கேட்கும்பொழுது அனுராக் காஷ்யப்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது உண்மைதான் எனவும் தற்போது படுத்த படுக்கையாக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் கூறியுள்ளனர்.

பல சினிமா பிரபலங்கள் கொரோனாவின் பிடியில் தவித்து வரும் இந்த காலகட்டத்தில் இவருக்கு இப்படி ஒரு பாதிப்பு வந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News