வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

8 வயது கம்மியான ஹீரோவுடன் ஜோடி போடும் அனுஷ்கா.. தேவசேனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் அனுஷ்கா ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் அனுஷ்கா நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அனுஷ்கா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார். ஆனால் பாகுபலி படத்திற்குப் பிறகு அனுஷ்காவிற்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அனுஷ்கா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

சமீபத்தில் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ஸ் என்ற படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் அனுஷ்காவுக்கு எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கவுள்ளார்.

நவீன் பாலிஷெட்டி அனுஷ்காவை விட 8 வயது இளையவர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார். அண்மையில் நிவின் பாலிஷெட்டி பிறந்தநாளில் அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

naveen-anushka
naveen-anushka

Trending News