வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்ன திட்டுனா அசிங்க அசிங்கமா கேப்பேன்.. அடங்காத அபிஷேக்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆன நிலையில் இன்னும் பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அநியாயத்துக்கு நிகழ்ச்சி சப்பென்று இருக்கிறது என ரசிகர்கள் கருதுகின்றனர். அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த அபிஷேக் போனவாரம் வெளியானதால் இருந்த சுவாரசியமும் போய்விட்டது.

எப்படியோ ஒருவருக்குள் ஒருவர் சண்டையை மூட்டி நிகழ்ச்சியை ஓட்ட பார்க்கிறது விஜய் டிவி நிறுவனம். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் டிவி நிறுவனம் பிக் பாஸ் நிகழ்ச்சி டி ஆர் பி எல் செம அடி வாங்கியதை நினைத்து மொத்த சேனலும் கதிகலங்கிப் போய் விட்டதாம். அதற்கு காரணம் சர்வைவர் நிகழ்ச்சி தான் என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க நிகழ்ச்சியில் அளவுக்கதிகமாக பேசிக்கொண்டிருந்த அபிஷேக் மக்களுக்குப் பிடிக்காதவறாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அபிஷேகம் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரைப் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் அளவுக்கு அதிகமாக சமூக வலைதளங்களில் வந்தது என்பதை கண்டிப்பாக வெளியில் வந்தவுடன் தெரிந்து கொண்டிருப்பார்.

abishak-bb5-cinemapettai5
abishak-bb5-cinemapettai5

பேசுறேன் பேசுறேன் பேசிக்கிட்டே இருக்கிறான் என்ற ஒரே ஒரு கருத்துதான் அவர் மீது விமர்சனமாக வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கர்வம் தான் அவர் சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு காரணம் எனவும் ஒரு பக்கம் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்த அபிஷேக் தன்னைப்பற்றி தவறாக கேலி கிண்டல் செய்பவர்களை அசிங்க அசிங்கமாக திட்டி விடுவேன் என்று கூறியுள்ளது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாகிவிட்டது. சும்மாவே வச்சு செய்யும் நெட்டிசன்கள் இந்த முறை சொல்லவா வேண்டும். எல்லாம் வேற லெவல் செய்கை தான்.

Trending News