புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விரைவில் திருமணம் செய்து கொள்ளும் அனுஷ்கா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனுஷ்கா. இருப்பினும் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தரவில்லை. இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அருந்ததி படமே அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அப்படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சரித்திர படங்கள் என்றாலே அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார் எனும் அளவிற்கு தத்ரூபமாக நடித்து இருப்பார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த அனுஷ்கா, தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்து புதிய ட்ரெண்டை உருவாக்கினார்.

பாகுபலி படத்திற்கு பின்னர் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் அனுஷ்கா. இந்நிலையில் சமீபகாலமாக அனுஷ்காவின் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படம் வெளியான சமயத்தில் உடன் நடித்த நடிகர் பிரபாஸை அனுஷ்கா காதலிப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

ஆனால் அனுஷ்கா அந்த தகவலை மறுத்தார். இதனை அடுத்து தொழிலதிபரை ஒருவரை திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த செய்தியையும் அனுஷ்கா மறுத்தார். பின்னர் கிரிக்கெட் வீரர், பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா உள்ளிட்ட அனைவருடனும் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. தனது திருமணம் குறித்து வெளியான அத்தனை செய்திகளையும் அனுஷ்கா மறுத்து வந்தார்.

anushka-saroja
anushka-saroja

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவரது திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. ஆனால் இதுவரை இந்த தகவல் குறித்து அனுஷ்கா எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் 2023க்குள் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News