வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நான் பண்ண பெரிய முட்டாள்தனம்.. சூசகமாக சொன்ன அனுஷ்கா

தற்போது ‘காதி’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி. ஒரு காலத்தில் தமிழர்கள் மனதை ஆண்டுகொண்டிருந்த அருந்ததி, சில நாட்களில் காணாமல் போனார். அதற்க்கு காரணம் அவர் எடுத்த ஒரு முடிவு தான்.

உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்தார் அனுஷ்கா ஷெட்டி. ஒரு படத்திற்க்காக தைரியமான முடிவை எடுப்பதாக நினைத்து அவர் செய்த இந்த விஷயம், அவருடை வளர்ச்சிக்கு யமனாக மாறியது. இந்த நிலையில் அனுஷ்கா கதையை தேர்ந்தெடுப்பதில் தனக்கு இருக்கும் பார்வையை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது, “நான் திரைத்துறைக்கு வந்த புதிதில், எனக்கு என்ன செய்ய வேண்டும், வாய்ப்பை எப்படி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தான எந்த ஐடியாவும் கிடையாது. ஒரு கதை பிடித்துவிட்டது, கதாபாத்திரம் பிடித்து விட்டது, மனதில் fix ஆகிவிட்டால், அதில் கண்டிப்பாக நடிப்பேன்.”

தைரியம் வேற முட்டாள்தனம் வேற

“பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படத்திற்கு இடையேதான் நான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிக்க கமிட்டானேன். அப்போது பல பேர் இந்த சமயத்தில், இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். காரணம், அந்த படத்தில் நான் எடையை அதிகரிக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்தேன்.”

“தைரியம் வேற.. முட்டாள்தனம் வேற.. இது எனக்கு பின்பு தான் புரிந்தது. அதே நேரத்தில், அருந்ததி போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு, விபச்சாரியாக வானம் படத்தில் நடித்தேன். ஆரம்பத்தில், விமர்சித்தாலும், அந்த படம் எனக்கு நல்ல பெயரை தான் வாங்கி கொடுத்தது. ” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரசிகர்களும் இதையே தான் நினைத்தார்கள். இஞ்சி இடுப்பழகி படத்தில் மட்டும் அனுஷ்கா நடிக்கவில்லை என்றால், அவர் கேரியரில் எங்கோ சென்றிருப்பார், என்று தான் பேசி வருகிறார்கள். தற்போது, அனுஷ்காவும் தான் எடுத்த முடிவு தவறானது என்று தான் நினைக்கிறார்கள் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

Trending News