பிரபல நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களில் வசூல் சாதனை செய்தவர். குறிப்பாக அருந்ததீ, பாகமதி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை ஹீரோக்களுக்கு இணையாக ஏற்றி நடித்த பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார் அனுஷ்கா.
பாகுபலி படத்தில் கூட அனுஷ்கா உடலை குறைத்து ஒல்லியாக காண்பிப்பதற்காக மட்டுமே பல நாட்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அனுஷ்காவின் கதாபாத்திரம் அந்தப் படத்தில் பேசப்பட்டது.
கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு பல படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
அதற்காக தன்னுடைய தோழிகளுடன் தன்னுடைய குல தெய்வத்தை பார்ப்பதற்காக சாதாரண மக்களைப் போல் எளிமையான முறையில் படகில் சென்றார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருப்பதே அனுஷ்காவுக்கு இவ்வளவு ரசிகர்கள் தேடிக் கொடுத்தது என்பதும் வரலாறு.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக அனுஷ்கா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கலைந்த தலைமுடியுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.
