வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்னை விட வயசு கம்மியா இருக்கிற ஆள்தான் எனக்கு வேணும்.. கல்யாணத்திற்கு கண்டிஷன் போட்ட அனுஷ்கா

சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள் அனைவருமே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் அந்த வயதையும் தாண்டி கடந்து சென்று கொண்டிருப்பவர்தான் அனுஷ்கா.

தற்போது 39 வயதை தாண்டி இருக்கும் அனுஷ்கா இன்னும் மாப்பிள்ளை கிடைக்காமல் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். மாப்பிள்ளை கிடைக்க பல கோடி செலவழித்து பூஜை எல்லாம் நடத்தியுள்ளார்.

அனுஷ்காவுக்கு நீண்ட நாட்களாக மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக அநியாயத்திற்கு உடல் எடையை ஏற்றி பின்னர் குறைக்க முடியாமல் தற்போது வரை தடுமாறி வருகிறார் அனுஷ்கா.

ஈசியாக உடம்பை ஏற்றி இறக்கி விடலாம் என நினைத்து அவர் செய்த இந்த வேலை அவரது வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டது. இதன் காரணமாக சினிமா வாய்ப்பு சுத்தமாக இல்லாததால் திருமணமாவது செய்துக் கொள்ளலாம் என தொடர்ந்து மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

ஆனால் அனுஷ்கா தற்போது பார்ப்பதற்கு கொஞ்சம் ஆண்டி போல இருப்பதால் தன்னைவிட வயது குறைவான ஆளாக இருந்தால் தான் நாம் பிரபலமான ஜோடியாக வலம் வர முடியும் எனவும், அப்போது தான் நாமும் இளமையாக தெரிவோம் எனவும் ஒரு வழியாக போட்டு தன்னுடைய பெற்றோர்களிடம் இதை ஒரு கண்டிஷன் ஆகவே சொல்லிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் எனவும் கூறி விட்டாராம். தற்போது வயது குறைவான தொழிலதிபரை எங்கே போய் தேடுவது என அனுஷ்கா குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாம்.

anushka-cinemapettai-01
anushka-cinemapettai-01

Trending News