திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அனுஷ்கா.. தேவசேனாவுடன் தனுஷ் செய்த தரமான சம்பவம்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த அனுஷ்கா, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் அனுஷ்காவிற்கு பெரிய ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொண்டு அவர் நடித்து அசத்தினார்.

இந்த படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா வித்தியாசமான முயற்சியால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்துவிட்டார். ஆர்யாவின் இஞ்சி இடுப்பழகி படத்தில் கண்ணா பின்னான்னு உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா, அதை குறைக்க முடியாமல் தடுமாறினார். அந்த சமயத்தில் அவருக்கு சுத்தமாகவே பட வாய்ப்புகள் வரவில்லை.

Also Read: நாலா பக்கம் சர்ச்சையை கிளப்பும் மில்லர்.. விலை உயர்ந்த அந்த காரை கேட்டு தயாரிப்பாளருக்கு டார்ச்சர்

எப்படியோ இப்போது செம ஸ்லிம்மாக மாறி இருக்கும் அனுஷ்கா தனது செகண்ட் இன்னிங்ஸ் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’என்ற படத்தின் மூலம் துவங்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் நிச்சயம் அனுஷ்கா மீண்டும் ஒரு ரவுண்டு கட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஒரு தரமான சம்பவம் செய்திருக்கிறார். அனுஷ்கா இதில் சமையல் கலைஞராக நடித்துள்ளார். படத்திற்கு ராதா இசை அமைத்துள்ளார். யூவி கிரியேஷன் தயாரிக்கும் இந்த படத்தை மகேஷ் பாபு என்பவர் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் இந்த படத்தில் அசத்தலான பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

Also Read: தனுஷின் ரீல் அண்ணன் விஜய் சேதுபதிக்கு செய்த துரோகம்.. அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை

‘ஹதாவிடி’ என துவங்கும் இந்தப் பாடலை தனுஷ் தான் பாடவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பாக தனுஷும் அனுஷ்காவும் இணைந்து சச்சினுக்காக உருவாக்கப்பட்ட பாடலில் நடனம் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலையும் தனுஷ் தான் பாடினார்.

இப்போது மறுபடியும் அனுஷ்கா தனது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கி இருக்கும் படத்தில் பாடல் பாடி அந்த படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறார் தனுஷ். இதுவரை இவருடைய பாடல்கள் எல்லாம் இளசுகளின் பேவரைட் பாடல்களாகவே அமைந்திருக்கிறது. அப்படித்தான் இந்த பாடலும் இருக்கும் என யோசிக்கின்றனர். இதனால் டோலிவுட் மட்டுமல்ல கோலிவுட் ரசிகர்களிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Also Read: இளசுகளின் 6 கிரஷ் நடிகைகளை ஆன்ட்டி என ஒதுக்கப்பட்ட பரிதாபம்.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அனுஷ்கா

Trending News