வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிரபாஸ் படத்திலிருந்து அனுஷ்கா நீக்கம்.. இதெல்லாம் ஒரு காரணமா?

தமிழில் 2006 ஆம் ஆண்டு ரெண்டு படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டு தமிழில் டப் செய்து வந்த அருந்ததி படமே தமிழ் ரசிகர்களுக்கு இவரை பரீட்சையப்படுத்தியது. மேலும் அதனைத் தொடர்ந்து விஜயுடன் வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்தார்.

இவருடைய போறாத காலம், இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க புரட்சிகரமான முடிவை எடுத்து இப்போ வரை நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டிருக்கிறார். ஆனால் உடல் எடையை எளிதில் ஏற்றிய அவரால் அதை குறைக்கவே முடியவில்லை.

இதை தொடர்ந்து பிரபாஸுடன் இணைந்து பாகுபலி 1 மற்றும் 2 பாகங்களில் நடித்தார். அதில், இவர்கள் காம்போ பெருமளவில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில் நிசப்தம் எனும் படத்தில் நடித்து இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மிஸ்டர் அண்ட் மிர்ஸஸ் பொலி ஷெட்டி படமும் வெளியாகி இருந்தது. தற்போது வரை அனுஷ்காவிற்கு கம்பேக் படமாக அமையவில்லை.

இதெல்லாம் ஒரு காரணமா?

நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்த அனைத்து படங்களிலும் இருவருக்கும் பக்காவாக ஜோடி பொருத்தம் அமைந்திருக்கும். இந்நிலையில் பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடிக்க கமிட் ஆகிய படம் சாஹோ.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் அனுஷிகாவே நடிக்க இருந்ததாகவும், அவரது உடல் எடை காரணமாக அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தில் நடிக்க தீவிர உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.. இதில் திடிரென்று படத்திலிருந்து நீங்கியதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானாராம்.

இன்றளவும் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படி இருக்க பிரபாஸ் படத்திலிருந்தே, இதெல்லாம் ஒரு காரணமாக மேற்கோள்காட்டி நீக்கப்பட்டது, ஏற்புடையது அல்ல என்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Trending News