வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திருமணம் பண்ணாமல் இருப்பது ஒரு குத்தமா, பேசும் பொருளாக மாறிய அனுஷ்கா.. 43 வயதில் மூன்று கல்யாணமா?

Anushka Shetty: நடிகை அனுஷ்கா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்து இவருக்கு என்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதிலும் சில ஹீரோயின்கள் நடிப்பு மட்டும் மறக்கவே முடியாத அளவிற்கு ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு இருக்கும்.

அதில் ஒரு நடிகையாக தான் அனுஷ்கா தற்போது வரை வலம் வருகிறார். அதற்கு காரணம் திறமையான நடிப்பாலும் இவருடைய அழகிய தோற்றத்தாலும் ஹீரோகளுக்கு இணையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததாலும் பெயர் சொல்லும் அளவிற்கு நடித்துக் காட்டக்கூடிய பேரழகியாக இருக்கிறார்.

அப்படிப்பட்டவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் இணைந்ததற்குப் பிறகு இவருடைய மார்க்கெட் வேற லெவல் போய்விட்டது. அந்த அளவிற்கு இவருடைய ஜோடி அனைவரையும் கவர்ந்து விட்டது. அத்துடன் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று பேச ஆரம்பித்தார்கள்.

அந்த வகையில் இணையத்தில் ஒரு பக்கம் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். திருமணம் செய்யப் போகிறார்கள் என்று பல வதந்திகள் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்லும் விதமாக எங்களுக்குள் அந்த மாதிரி ஒரு நினைப்பு இல்லை. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அவ்வளவு தான் என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

ஆனாலும் இப்பொழுது வரை இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் அனுஷ்கா பற்றி தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. பாகுபலி பிரபாஸ்க்கு பிறகு அனுஷ்கா இயக்குனர் பிரகாஷ் கோவெலமுடியுடன் காதல் இருப்பதாகவும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் வெளிவந்தது.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது சம்பந்தமாக அனுஷ்கா கொடுத்த ஒரு பேட்டியில் எனக்கும் பிரகாஷ் கோவெலமுடிக்கும் திருமணமா? எனக்கே தெரியாமல் எப்பொழுது இப்படி நடந்தது. இந்த வதந்திகள் என்னை நிச்சயம் பாதிக்கப்படுவதில்லை. அதனால் இது உண்மையுமில்லை, ஏன் என்னுடைய திருமணத்தை இவ்வளவு பெரிய விஷயமாக நினைத்து அனைவரும் பேசும் பொருளாக பேசி வருகிறீர்கள் என்பது தெரியவில்லை.

திருமணம் என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை, அதை மறைத்து பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் மட்டும் என்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டிய காரணம் என்னவாக இருக்கும், இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயம் அதனால் இந்த மாதிரி வதந்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம். என்னுடைய திருமணம் முடியும் தருவாயில் நான் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது நபருடன் அனுஷ்கா திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. துபாயை சேர்ந்த தொழிலதிபரை அனுஷ்கா திருமணம் செய்ய போவதாகவும், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அனுஷ்கா சொல்றாங்களோ இல்லையோ அதற்கு முன் அனுஷ்காவை வைத்து மூன்று நபர்களுடன் திருமணத்தை முடித்துவிட்டார் என்று வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது. 43 வயது ஆனதால் திருமணம் பண்ணாமல் இருப்பது ஒரு குற்றமா என்பதற்கு ஏற்ப அனுஷ்காவின் கல்யாணம் தற்போது பேசும் பொருளாகவே போய்க்கொண்டிருக்கிறது.

Trending News