வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவின் வலது கை தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் 4 பிரம்மாண்ட படங்கள்.. 1000 கோடிக்கு வலை விரிக்கும் கங்குவா

Suirya: சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் வரவில்லை. வந்த இந்த படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. ஆனாலும் கேமியை தோற்றத்தில் விக்ரம் மற்றும் ராக்கெட்டரி படத்தில் நடித்ததன் மூலம் இருந்த இமேஜை கொஞ்சம் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கமிட் ஆகிய படம் தான் கங்குவா. இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 3டி மற்றும் ஐ மேக்ஸ் மூலமாக வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவரை சூர்யாவின் நடிப்பில் வராத ஒரு வித்தியாசமான கதையை மிரட்டலான நடிப்பாக கொண்டு வரப் போகிறார்.

தயாரிப்பிலும் பட்டய கிளப்பும் சூர்யா

இப்படத்தை சூர்யாவின் வலது கை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். அந்த வகையில் போட்ட காசை தாண்டி டபுள் மடங்கு லாபத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 1000 கோடிக்கு விலை விரித்து இருக்கிறது. இவர்கள் போட்ட கணக்குப்படி கங்குவா படத்தின் வசூல் லாபத்தை கொடுக்குமா என்பதை வருகிற அக்டோபர் 10ஆம் தேதி தெரிந்துவிடும்.

ஏனென்றால் அப்பொழுதுதான் இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படத்திற்கு கமிட்டாகி இருக்கிறார். இப்படி ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் மெனக்கீடு செய்து வருகிறார். அந்த வகையில் கங்குவா படத்தை தாண்டி மற்றொரு மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகன் நடிப்பில் உருவாக்கிய படம் தான் தங்கலான். இப்படத்தின் பட்ஜெட் 150 கோடியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தை சூர்யாவின் பினாமியாக இருக்கும் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். பொதுவாக விக்ரம் படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அதுவும் வித்தியாசமான உடலை வருத்திக்கொண்டு விக்ரம் நடிக்கிறார் என்றால் அந்த படம் வசூல் அளவில் பெருத்த லாபத்தை பார்த்து விடும். அடுத்ததாக அல்லு அர்ஜுனன் தம்பி அல்லு சிரிஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் BUDDY. இப்படம் வருகிற ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளிவர இருக்கிறது. சாம் ஆண்டன் இயக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இதனை அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் கீர்த்தி செட்டி நடிப்பில் உருவாகிய படம் வா வாத்தியாரே. இவர்களுடன் சேர்ந்து சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.

இப்படத்தையும் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். அந்த வகையில் சூர்யா ஒரு பக்கம் நடிப்பை காட்டினாலும் இன்னொரு பக்கம் தயாரிப்பில் பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக வெளியிட காத்துக் கொண்டிருக்கிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமில்லாமல் மற்ற பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தயாரிக்கும் விதமாக அவர்களுக்கு வலை விரித்து வருகிறார்.

கங்குவா படத்தின் அப்டேட்

Trending News