காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஒரு காலக்கட்டத்தில் சினிமாவில் பிசியாக இருந்த அப்பாஸ் படங்களின் தேர்ந்தெடுப்பதில் சுதப்பிவிட்டார்.
ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர், சில சொதப்பலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதில் இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள் அப்பாஸ்க்கு வந்தும் அதை தவறவிட்டார்.
விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படம் முதலில் அப்பாஸக்கு சென்றது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. அதன்பிறகு அந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றது. விஜயின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் காதலுக்கு மரியாதை.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். முதலில் பிரசாத்துக்கு பதிலாக இப்படத்தில் அப்பாஸ் மற்றும் அஜீத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இவர்களின் கால்ஷீட் கிடைக்காததால் பிரசாந்த் நடித்து இருந்தார்.
அப்பாஸ் காதலுக்கு மரியாதை, ஜீன்ஸ் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து இருந்தால் அவருடைய சினிமா கேரியரில் வேறு இடத்திற்கு சென்று இருப்பார். ஆனால் ஜாலி, இனி எல்லாம் சுகம், ஆசைத்தம்பி போன்ற மொக்கையான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததால்
தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அப்போது விஜய், அஜித்திற்கு இணையாக இருந்த அப்பாஸின் தவறான பட தேர்வ அவருடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியாக அமைந்தது.