புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாட்ச் கிப்ட் வாங்குறதுக்கு எல்லாம் ஒரு அந்தஸ்து வேணும்.. கமல் மனதை கவர்ந்து பரிசு வாங்கிய 4 நடிகர்கள்

Kamal Gifted watch: உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் என்சைக்ளோபீடியா என சொல்லும் அளவிற்கு தன்னுடைய அறிவையும் திறமையும் வளர்த்துக் கொண்டு சாதனை படைத்து வருகிறார். தற்போது வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்களுக்கு ஒரு குருவாக இருக்கிறார். அப்படிப்பட்ட இவரிடமிருந்து ஒரு கிப்ட் கிடைக்கிறது என்றால் அது மிகப் பெரிய பொக்கிஷம் ஆகத்தான் இருக்கும்.

முக்கியமாக கமலுடன் இணைந்து நடித்த நடிகர்களின் அசாத்திய திறமையை பாராட்டும் விதமாகவும் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதால் வாட்ச் கிப்டாக கொடுத்திருக்கிறார். கமலிடம் இருந்து ஒரு கிப்ட் வாங்குவதற்கு எல்லாம் ஒரு அந்தஸ்து வேண்டும். எல்லோராலும் ஈசியாக வாங்கிட முடியாது. திறமையும் நடிப்பும் இருந்தால் மட்டுமே கமல் அவர்களுக்கு ஊக்குவிப்பதற்காக இந்த பரிசுகளை வழங்குவார்.

அப்படி கமலிடம் வாட்சை கிப்டாக வாங்கிய நான்கு நடிகர்களை பற்றி பார்க்கலாம். கமல்ஹாசன் இயக்கி, எழுதி, தயாரித்த படம் தான் ஹேராம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். ஆனால் இதில் நடிப்பதற்காக எந்தவித பைசாவும் வாங்காமல் கமலுக்காக முக்கியமான கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்பொழுது இவருடைய நடிப்பை பாராட்டி இவருக்காக வாட்ச் கிப்டாக கமல் கொடுத்திருக்கிறார்.

Also read: நமத்து போன படம்னு பாதியிலேயே நிறுத்திய கமலின் 5 படங்கள்.. அஜித்தின் இயக்குனருக்கு போட்ட கோவிந்தா

இதனை தொடர்ந்து நகைச்சுவை படமாகவும், இந்த படத்தை பார்த்தால் விழுந்து விழுந்து சிரித்து வயிறு வலியை வந்துவிடும் என்று சொல்லும் அளவிற்கு கோவை சரளாவுடன் கமலஹாசன் கலக்கிய படம் தான் சதி லீலாவதி. இதில் கமலின் நண்பராக ரமேஷ் அரவிந்த் நடித்திருப்பார். அப்பொழுது இவருடைய டெடிகேஷன் பார்த்து வியந்து போன கமல் உடனே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையில் வாட்ச் ஒன்றை கிப்டாக பரிசளித்து அவரை கௌரவித்திருக்கிறார்.

அடுத்ததாக கமல் நடிக்கும் படங்களில் புதுசாக ஒரு நகைச்சுவை கேரக்டர் தேவையே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு தனி ஒரு ஆளாக இருந்து காமெடியை கொடுப்பதில் கெட்டிக்காரர். அப்படி இவர் நடிப்பில் காமெடி படமாக வந்தது தெனாலி. இதில் இவருடன் ஜெயராம் நடித்திருப்பார். அந்த சமயத்தில் இவருக்கும் கமல் வாட்ச் கிப்டாக கொடுத்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. இதில் கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யா, ரோலக்ஸ் கேரக்டரில் ஒரு 5 நிமிடத்திற்கு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த கதாபாத்திரம் தற்போது வரை மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. அதே மாதிரி இந்த கதாபாத்திரத்துக்காக சூர்யா சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். அத்துடன் இவருடைய நடிப்புக்காக கமல் 55 லட்சம் மதிப்புள்ள ரோஸ் கோல்டு மூலம் உருவாக்கப்பட்ட வாட்சை கிப்டாக கொடுத்திருக்கிறார்.

Also read: மணிரத்னத்தால் முடியாமல் போன காரணம் காரியம்.. மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்

Trending News