கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி விட்டன. இதனால் சற்று நிலைமை சாதகமாக இருக்கும் சமயத்தில் தங்கள் படங்களை வெளியிட்டு கொள்ளலாம் என பெரிய பட்ஜெட் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள மூன்று பெரிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால் மிகவும் கடுமையான போட்டி நிலவ உள்ளது. அதுவும் மூன்றுமே வெவ்வேறு மொழிகளில் தயாராகியுள்ள பெரிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி முதலில் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இரண்டாவதாக கன்னடத்தில் பிரம்மாணடமாக உருவாகியுள்ள கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தான் வெளியாக உள்ளதாம். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இரண்டாம் பாகமும் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படங்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சட்டா படமும் அதே தினத்தில் தான் வெளியாக உள்ளதாம். இப்படி மூன்று மொழிகளில் உருவாகியுள்ள வெவ்வேறு படங்கள் ஒரே தினத்தில் வெளியாக உள்ளன.
இந்த படங்கள் வெளியாவது ஒருபுறம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் மற்றொரு புறம் வியாபார ரீதியாக இந்த படம் ஒன்றையொன்று கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. அதன்படி கேஜிஎப் படம் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் பீஸ்ட் படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல் பீஸ்ட் படம் கேஜிஎப் படத்தின் தமிழக வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கேஜிஎப் 2 படம் பாலிவுட்டில் லால் சிங் சட்டா படத்தை வியாபார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் அதுவும் வெவ்வேறு மொழிகளில் உருவாகியுள்ள படங்கள் வெளியானால் இதுபோன்ற பிரச்சனைகள் தான் உண்டாகும்.