தமிழ் சினிமாவை தூக்கி கொண்டாடக்கூடிய ஒரு இயக்குனர் என்றால் ஏ ஆர் முருகதாஸ் தான். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்து 100 நாட்களுக்கு மேல் ஓடி உள்ளன.
ஒரு காலத்தில் நடிகர்களுக்காக மட்டுமே தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள். அதன் பிற இயக்குனர்களுக்காகவும் தியேட்டருக்கு வர வைத்தவர் ஏ ஆர் முருகதாஸ். அப்படி ஒரு புது ட்ரெண்டை உருவாக்கினார்.
ஏ ஆர் முருகதாஸ் பொருத்தவரை அவரது கதைகள் அனைத்திலுமே உள்ள மையக்கரு ஏதாவது ஒரு சமூக கருத்தை வைத்து செயல்படும். அந்த அளவிற்கு படத்தின் கதைக்கு பக்கபலமாக உழைத்து இருப்பார்.
இவர் இயக்குனராக வெற்றி கண்டதன் மூலம் பலரும் இவரை இயக்குனர் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏ ஆர் முருகதாஸ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் அப்பாஸ் மற்றும் மணிவண்ணன் நடிப்பில் வெளியான பூச்சூடவா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த தகவல் பலருக்கும் தெரியாது. அதாவது சினிமாவில் பொருத்தவரை எதன் மூலம் வெற்றி பெறுகிறோமோ அதுவே அவர்களுக்கு அடையாளமாக மாறி விடும் அப்படி ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக வெற்றி பெற்றதால் பலரும் இவர் வெற்றி இயக்குனர் என்ற அறிமுகம் தான் உள்ளது.
ஆனால் இவரும் ஒரு நடிகர் என்பது தற்போதுதான் ஒரு சில ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் முருகதாஸ் சமீபகாலமாக கதைகளில் காப்பியடிப்பது ஆகவும் விமர்சனம் எழுந்ததால் தற்போது ஒரு கதையை எழுதி வைத்துவிட்டு நடிகர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.