திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

31 வயது நடிகையுடன் டேட்டிங் செய்யும் ஏ ஆர் முருகதாஸ் ஹீரோ.. 58 வயதில் நடக்க இருக்கும் 3 வது திருமணம்

வயது வித்தியாசம் பார்க்காமல் டேட்டிங் செய்வது, திருமணம் செய்து கொள்வது எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கொடுத்த நடிகர் தற்போது மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாராம்.

அதாவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி திரைப்படம் தமிழில் சக்கை போடு போட்டது. அதை தொடர்ந்து ஹிந்தியில் அப்படம் ரீமேக் ஆனது. அதில் சூர்யா நடித்திருந்த கேரக்டரில் அமீர்கான் நடித்திருந்தார். தமிழைப் போலவே அங்கும் இப்படம் வசூல் வேட்டை நிகழ்த்தியது.

Also read: இந்த ஒரு பயத்தில்தான் கமலுடன் இணையவில்லை.. புல்லரிக்க வைத்த ஏ ஆர் முருகதாஸ்

தற்போது 58 வயதாகும் இவர் 31 வயதான நடிகையுடன் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து ஏற்கனவே போட்டோக்கள், வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தான அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருப்பது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அதிலும் அந்த நடிகை அவருக்கு மகளாக நடித்தவர் என்பதுதான் பரபரப்புக்கு முக்கிய காரணம். அதாவது அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தங்கல்.

Also read: கடைசி 3 படத்தின் தோல்வியை பகிரங்கமாக போட்டுடைத்த ஏ ஆர் முருகதாஸ்.. அதிர்ச்சியில் திரையுலகம்

அதில் அவருக்கு மகளாக நடித்திருந்த பாத்திமா சனா சாயிக் அப்படத்தின் போதே அமீர்கான் உடன் ஓவர் நெருக்கம் காட்டி வந்தார். அதைத்தொடர்ந்து பொது இடங்களில் கூட இந்த ஜோடி அதிகம் தென்பட ஆரம்பித்தது. சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படி வருட கணக்கில் இவர்கள் தங்கள் உறவை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த சூழலில் இவர்கள் இருவரும் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்ற ஒரு செய்தி பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. ஆனால் அதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது வெறும் வதந்தி என அமீர்கான் தரப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: பெரிய 2 நடிகர்களுக்கு வலைவிரித்து ஏ ஆர் முருகதாஸ்.. அப்புறம் என்ன 1000 கோடி கன்ஃபார்ம்

Trending News