வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தளபதிக்காக வைத்திருந்த கதையில் ஸ்டைலிஷ் நடிகரை மாற்றிய முருகதாஸ்.. உச்ச கட்ட டென்ஷனில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தீனாவில் துவங்கி சர்கார் வரை எந்த சறுக்கலும் இல்லாமல் பல வெற்றிப்படங்களை இயக்கி வந்தார் ஏழாம் அறிவை தவிர. தளபதி விஜயுடன் மட்டும் துப்பாக்கி, கத்தி, சர்கார் என டிரிபிள் வெற்றிகளை பெற்றுத் தந்தார். தேவையான கருத்துக்களை வெளிக்காட்டும் கதைக்களம் என அட்டகாசமாய் அமைத்திருப்பார் இயக்குனர் முருகதாஸ். இவர் திரைக்கதையின் விருவிருப்போடு கொண்டு சேர்ப்பதில் கெட்டிக்காரர்.

தல அஜித்துடன் தனது முதல் படத்தை துவங்கியவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க மாட்டாரா என தல ரசிகர் பட்டாளம் எதிர்பார்க்கும் இயக்குனர் என்றால் அது ஏ.ஆர்.முருகதாஸ் தான். ஏற்கனவே தெலுங்கில் ரமணா படத்தின் ரீமேக்கை சிரஞ்சீவியை வைத்து இயக்கினார். மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தையும் இயக்கியிருந்தார். இதில் ஸ்பைடர் பெரிய அடி வாங்கியது.

alluarjun-cinemapettai
alluarjun-cinemapettai

இந்நிலையில் அல்லு அர்ஜுன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இயக்குனர் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தி வந்த அதே தருணம் தளபதி 65 படத்திற்காக தயாரான கதையைதான் அல்லு அர்ஜுனிடம் சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல் வாங்கியதாகவும் ஒரு தகவல் அதிவேகமாய் பரவி வருகிறது.

Trending News