வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சிவகார்த்திகேயனுக்காக 4 பேரை குறி வைக்கும் ஏ ஆர் முருகதாஸ்.. கேமியோவுக்கு கூட்டிட்டு வரும் அந்த பெத்த கை

Sivakarthikeyan: சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆச்சுன்னா, அதை அப்படியே ஃபாலோ பண்ணி பத்து படம் வெளியாகி விடும். பேய் படம் ஹிட்டான அடுத்த பத்து படம் பேய் படம் தான் இருக்கும். காமெடி படம் ஹிட்டான தொடர்ந்து காமெடி படங்களா வெளியாகும்.

அதே மாதிரி கடந்த சில வருடங்கள் வரை சினிமாவை ரொம்பவும் ஆட்கொண்டு இருந்த விஷயம்னு சொல்லணும்னா பயோபிக் படங்கள். அதேபோன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டாகி இருக்கிறது.

அதுதான் பெரிய ஹீரோக்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது. விக்ரம் படத்தில் ஏற்கனவே கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மூன்று பெரிய ஹீரோக்கள் இருந்தார்கள். அதைத் தாண்டி நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் என்னும் கேமியோ ரோல் கொடுக்கப்பட்டது.

இந்த ஐடியா பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் எங்க பார்த்தாலும் கேமரால்களாக தான் இருந்தார்கள். இப்போ சிவகார்த்திகேயனும் இந்த டிரெண்டை செய்ய இருக்கிறார்.

4 பேரை குறி வைக்கும் ஏ ஆர் முருகதாஸ்

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக தலைகாட்டாமல் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இருந்து வந்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கைகோர்த்து இருக்கிறார்.

எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் பெரிய நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார் முருகதாஸ்.

இதற்காக சுரேஷ்கோபி, ஜெயராம், மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தையில் இருக்கிறார்கள். இந்த நாலு பேரில் யாராவது ஒருத்தரை கிளிக் செய்து சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.

Trending News