வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

யாருனே தெரியாத நடிகருடன் கூட்டணி போடும் ஏ ஆர் முருகதாஸ்.. அய்யோ பாவம்!

ஒரு காலத்தில் ஏ ஆர் முருகதாஸ் என்றாலே தரம் என்ற பெயர் இருந்தது. ஆனால் கடைசியாக அவர் இயக்கிய சர்கார், தர்பார் போன்ற படங்கள் முருகதாஸ் மீதான மரியாதையை ரசிகர்கள் மத்தியில் குறைந்து விட்டது.

சமீபகாலமாக முருகதாஸ் முன்னணி நடிகர்களிடம் பட வாய்ப்பு கேட்டும் யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியாக இல்லை. அதற்கு அவரது முந்தைய படங்களின் தோல்வி தான் காரணம்.

இருந்தாலும் இந்த வாட்டி அப்படியெல்லாம் நடக்காது என கூறினாலும் அப்புறம் பார்க்கலாம் என அனுப்பி வைத்து விட்டார்களாம். இவர்கள் கூட பரவாயில்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்குள்ளேயே விடுவதில்லையாம்.

இப்படி உச்சத்திலிருந்த இயக்குனர் ஒரேயடியாக கீழே வந்தது இளம் இயக்குனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி 65 படத்தில் கூட முதலில் முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் அவரது கதை விஜய்க்கு பிடிக்காமல் தூக்கி விட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

இப்படி சோகமே சுமையாக சுற்றிக்கொண்டிருந்த ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வருபவர் ராம் போத்தேனி என்பவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

தெலுங்கிலேயே இவரது படங்கள் சுமாராக தான் செல்கிறது. இந்த நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அவரை வைத்து படம் எடுக்க உள்ளாராம் ஏ ஆர் முருகதாஸ். ராம் போத்தேனியை வைத்து ஏற்கனவே லிங்குசாமி தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ram pothineni-cinemapettai
ram pothineni-cinemapettai

Trending News