ஒரு காலத்தில் கெத்து இயக்குனராக வலம் வந்த ஏ ஆர் முருகதாஸ் சமீபகாலமாக வெத்து இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் தர்பார் படத்தில் உப்பு சப்பு இல்லாத திரைக்கதையை வைத்து படம் இயக்கியதுதான்.
தர்பார் படத்தை பார்த்துவிட்டு பல தலைவர் ரசிகர்களே அதிர்ச்சியடைந்து விட்டனர் என்பதுதான் உண்மை. சமீபகாலமாக ஏ ஆர் முருகதாஸிடம் சுத்தமாக சரக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை ஏ ஆர் முருகதாஸ் சமீபகாலமாக சர்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற சுமாரான படங்களை கொடுத்து வருகிறார். சர்கார் படத்தில் விஜய் மட்டும் நடிக்கவில்லை என்றால் அந்த அந்த படம் முதல் நாள் முதல் காட்சி கூட தாண்டி இருக்காது என்பதை தளபதி ரசிகர்களை மறுக்க மாட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் தளபதி 65 படத்தில் முதலில் இயக்க ஒப்பந்தமான முருகதாஸின் கதை சுமாராக இருந்ததை உணர்ந்த விஜய் கழட்டிவிட்டார் என்பதும் கூடுதல் தகவல்.
இந்நிலையில் இயக்கத்திற்கு கொஞ்ச காலம் ஓய்வு விட்டுவிட்டு தன்னுடைய தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளார் ஏ ஆர் முருகதாஸ். அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் அவரது அடுத்த படத்திற்கான டைட்டில் 1941 என வைத்துள்ளாராம்.
பொன்குமரன் என்ற இயக்குனர் இயக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாம். பெரும்பாலும் இந்தப்படம் ஓடிடி ரிலீஸாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.