வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏ ஆர் முருகதாஸ் பெருமை பட்ட சம்பவம்.. விஜய் பட வெற்றிக்கு ட்ரீட் கொடுத்த எஸ் ஜே சூர்யா

Director S J Surya: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து, விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் லியோ. இந்நிலையில் இவர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக எஸ் ஜே சூர்யா செய்த சம்பவத்தை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

பன்முகத் திறமை கொண்ட இவர் தன் ஆரம்ப காலத்தில் வசந்த் இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவருடன், எதிர்நீச்சல் குணசேகரன் என்று அழைக்கப்படும் மாரிமுத்து இருவரும் வாலி படத்தில் இணைந்து உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்கள்.

Also Read: அக்கடதேசத்தில் அதிகம் விற்கப்பட்ட 5 படங்கள்.. இரண்டு இடங்களிலும் பட்டையை கிளப்பிய தளபதி

அப்பட வெற்றிக்கு பிறகுதான் இயக்குனராக குஷி படத்தை இயக்கினார் எஸ் ஜே சூர்யா. அப்படம் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. அவ்வாறு இருப்பின் அப்பட ஒப்பந்தம் ஆகும்போது இவருக்கு அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்ட பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு தனது உதவி இயக்குனர்கள் 7 பேருக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த ஏழு பேரில் ஒருவர் தான் ஏ ஆர் முருகதாஸ். அவ்வாறு தன் முயற்சியால் படிப்படியாக முன்னேற்றத்தை அடைந்தவர் எஸ் ஜே சூர்யா. மேலும் குஷி படத்தில் ஒரு சில லட்சங்களை சம்பளமாக பெற்ற இவர் தனக்கென்று எதுவும் எடுத்து வைத்துக் கொள்ளாமல் தன்னிடம் உதவி புரிந்த உதவி இயக்குனர்களுக்கு கொடுத்துள்ளார்.

Also Read: குடிபோதையில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர்.. மனவேதனையில் துடிக்கும் வெற்றிமாறன்

அவ்வாறு தான் தனக்கும் பைக் வாங்கி கொடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ், எஸ் ஜே சூர்யாவை பற்றி நெகிழ்ந்து கூறினார். இவரிடத்தில் நானாக இருந்தால் பெற்ற சம்பளத்தை அப்படியே வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பேன். ஆனால் இவர் எதையும் யோசிக்காமல் இச்செயலை செய்தது என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என்று கூறினார்.

இதுபோன்று ஆரம்ப காலத்தில் தனக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக தன் உதவி இயக்குனர்களுக்கு ட்ரீட்டாக பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இது போன்ற மனம் கொண்டதால் தான் அவர் தோல்வியுற்றாலும் மீண்டும் எழுந்து முன்னேறி வர முடிகிறது.

Also Read: ஆர்யாவை ஓவர் டேக் செய்ய வரும் டான்சிங் ரோஸ்.. வேற லெவலில் உருவாகும் கூட்டணி

Trending News