Gajini Re Release: இன்று நயன்தாரா கால் சீட் கிடைப்பதே பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது. 12 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார்.16 வருடத்திற்கு முன்பு நயன்தாரா எப்படி இருந்தார். அப்பவே இந்த பொண்ணு சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று ஏ ஆர் முருகதாஸ் கனித்துள்ளார்
கஜினி படத்தில் ஞாபக மறதியால் சூர்யா அவர் உடம்பிலேயே எல்லாவற்றையும் எழுதிக் கொள்வார். முதுகில் முதற்கொண்டு எழுதி வைத்திருப்பார். ஆனால் அவரால் எப்படி முதுகில் எழுத முடியும் என்ற லாஜிக்கை யோசிக்க வைக்காமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். இந்த படத்தில் அசின் ஹீரோயினாக நடித்தார்.
நயன்தாரா கஜினி படத்தில் ஹீரோயினாக இல்லாட்டாலும் சூர்யாக்கு உதவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்பொழுது கேரளாவில் ரீ ரிலீஸ் ஆகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நயன்தாராவை பற்றி பல சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார்.
கஜினி ரீ ரிலீஸ்க்கு பின்னால் இவ்வளவு வம்பா
அப்போதெல்லாம் நயன்தாராவிற்கு கேரவன் எல்லாம் கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் வெயிலில் தான் உட்கார்ந்திருப்பார். அவரே அவருடைய வேலைகளை எல்லாம் செய்து கொள்வார். அவர் அணிந்துள்ள காஸ்ட்யூம்ஸ் சரியில்லை என்று சிலவற்றை பக்கத்தில் உள்ள பிளாட்பார்ம் கடைகளில் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதையும் பொறுப்பெடுத்தாமல் அணிந்து நடித்துள்ளார் நயன்தாரா.
ஒரு காட்சியில் வில்லன்கள் அவரை துரத்தும் போது அவர் அணிந்திருந்த உடை மிகவும் ஆபாசமாக இருந்திருக்கிறது. வேறு மாற்று உடை இல்லாததால் லோக்கல் கடைகளில் இருந்து வாங்கி வந்த உடையை காருக்கு பின்னால் உள்ள டிக்கி மறைவில் மாற்றி இருக்கிறார். இப்படி நயன்தாரா மிகவும் எளிமையாக நடந்து கொண்டதை கஜினி ரீ ரிலீஸ் நேரத்தில் பகிர்ந்துள்ளார் முருகதாஸ்.
- தன்மான பிரச்சனைன்னு அம்புட்டு கோடி கேட்ட நயன்தாரா
- லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தவறவிட்ட நயன்தாரா
- படமே ஓடல சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா