தளபதி 65 பட விவகாரத்தில் விஜய்க்கும் ஏஆர் முருகதாஸுக்கு ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது என விஜய் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் முருகதாஸ் தரப்பும் மிகவும் அப்செட்டில் உள்ளதாம்.
சர்கார் படத்திற்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இது விஷயமாக விஜய்யிடம் பேச விஜய்யும் முருகதாஸ் கதை வைத்திருந்தால் வந்து தாராளமாக சொல்லட்டும் என பெருந்தன்மையுடன் கூறினார்.
முருகதாஸ் சொன்ன கதை விஜய்யை பெரிதும் கவரவில்லை. இதன் காரணமாக தளபதி 65 படத்திற்கு இயக்குனரை மாற்றினார் தளபதி. இது முருகதாசுக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாம். எவ்வளவு பெரிய இயக்குனர் நான், என்னை விட்டுவிட்டு இளம் இயக்குனருடன் கூட்டு சேர்ந்து விட்டாரே என்ற கவலையும் ஒரு பக்கம் அவரை வாட்டி வதைத்துள்ளது.
இருந்தாலும் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு வரை தளபதி 65 படத்தில் எப்படியாவது இடம் பெற்றுவிட வேண்டும் என தன்னுடைய கதையில் அடிக்கடி மாற்றம் செய்து விஜய்யை சந்திக்க முயற்சி செய்துள்ளார்.
இதைப்பார்த்த விஜய் முருகதாஸை அழைத்து, இனிமேல் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார் போன்ற இளம் இயக்குனருடன் அடுத்தடுத்து சில படங்கள் செய்யலாம் என இருப்பதாகவும் இனி அடிக்கடி வீட்டு பக்கம் வரவேண்டாம் எனவும் ஓபனாகவே தெரிவித்துவிட்டாராம்.
இதனால் விஜய் மீது செம டென்ஷனான ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய வட்டாரங்களில் இனி விஜய்யுடன் படமே கிடையாது என தெரிவித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. முருகதாஸ் தற்போது முன்னணி நடிகர்களுக்கு வலை விரிக்காமல் இளம் நடிகராக இருந்தாலும் பரவாயில்லை என தன்னுடைய கதையால் தான் படம் வெற்றி பெறுகிறது என்பதை நிரூபித்தாக வேண்டும். ஆனால் செய்வாரா என்பது கேள்வி குறிதான். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.