வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

A R Rahman: இசை ஆர்வம் கொண்டு இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்கள் மக்களின் வரவேற்பை பெற்று மாபெரும் பிரபலமாய் தன்னை நிரூபித்தவர் ஏ ஆர் ரகுமான். இந்நிலையில் டெலிட் ஆன படங்களை ஓவர் நைட்டில் தெறிக்கவிட்ட சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

1990ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் தன் இசை பயணத்தை தொடங்கியவர் ஏ ஆர் ரகுமான். அதைத்தொடர்ந்து மும்பை, காதலன், திருடா திருடி, ஜென்டில்மேன் போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் இசையமைப்பாளராய் வெற்றி கண்டார்.

Also Read: விக்ரம் படம் ஒன்னும் கமலால ஓடல.. ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு நினைக்கவே கூடாது ஏன் என கூறும் பிரபலம்

2008ல் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இவர் மேற்கொண்ட இசையமைப்பு உலக அளவில் பிரபலமானது. அதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசை புயல் என்று அழைக்கப்பட்டார். இவரின் இசையை கேட்டு மயங்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தன் இசையால் மக்களை ஈத்தார் என்றே கூறலாம்.

அவ்வாறு உலகத்தினரால் கொண்டாடப்படும் இவரின் பிரமாண்ட இசையமைப்பையே பெரும்பாலான படங்களில் எதிர்பார்க்கின்றனர். வெறும் கீபோர்ட் பிளேயராய் இருந்த இவர் அதன் பின் பல நவீன நுட்பங்களை கொண்டு இசையமைப்பை கற்றுத் தேர்ந்தார். இவரின் இசையால் உயரிய விருதுகளை பெற்று தனக்கான அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பதித்துள்ளார்.

Also Read: ஓரளவுக்கு மேல பேச்சே இல்ல வீச்சு தான்.. சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார், மிரட்டும் 5-ம் நாள் வசூல்

அவ்வாறு இருக்க, தன் ஆரம்ப காலத்தில் காதலன் படத்தின் பாடல்களை இசையமைக்கும் போது, இவர் மேற்கொண்டு அனைத்து பிஜிஎம்களையும் ஸ்ரீதர் என்பவர் அறியாது டெலிட் செய்திருக்கிறார். அவ்வாறு ஷங்கர் இயக்கத்தில் உருவானது இப்படத்தின் பாடல்களை முடிக்க வேண்டிய நேரத்தில் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டதால், அதை ஏ ஆர் ரகுமான் மிகவும் கூலாக ஹேண்டில் பண்ணினாராம்.

இவரிடத்தில் யார் இருந்தாலும் இத்தகைய இழப்பை ஏற்க முடியாது கோபத்தை அள்ளித் தெளித்து இருப்பார்கள் இருப்பினும் தன் தன்மையை காத்து ஓவர் நைட்டில் இப்பாடல்களின் பிஜிஎம் ஐ ரெடி செய்து கொடுத்திருக்கிறார். இத்தகைய மேஜிக்கான சம்பவத்தை என்றும் மறக்க முடியாது என அவருடன் பணி புரிந்தவர் நெகிழ்ந்து வருகிறார்.

Also Read: ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

Trending News