விருது வாங்குவதிலேயே குறியாக இருக்கும் பல பிரபலங்களுக்கு மத்தியில் ஏ ஆர் ரகுமான் தேசிய விருது, ஆஸ்கர் விருது என அனைத்து விருதுகளையும் அள்ளிக் கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் பிறந்தாலும் தமிழ் மொழிக்கு மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளுக்கும் இசையமைத்து தன்னுடைய இசை பயணத்தை ஹாலிவுட் வரை சென்று விட்டார் மனுஷன்.
இளையராஜாவுடன் மறைமுகமான பனிப்போர் நடந்து வந்தாலும் இந்த விருது விஷயத்தில் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவை முந்திக் கொண்டே செல்கிறார். இளையராஜா ஆயிரகணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தாலும் ஏ ஆர் ரஹ்மானுக்கு கிடைத்த விருது இளையராஜாவிற்கு கிடைக்கவில்லை.
தன்னுடைய முதல் படமான ரோஜா படத்திலேயே ஏ ஆர் ரகுமான் தேசிய விருதைப் தட்டி சென்றார். அதன்பின் மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, ஸ்ரீதேவி நடித்த மாம் என ஆறு தேசிய விருதுகளை தட்டிச் சென்றுவிட்டார் ரகுமான்.
இதற்கு முக்கியமான காரணம் அவருடைய மேற்கிந்திய இசை கலப்பு தான். தன்னுடைய புதிய இசையை ரசிகர்களுக்கு வெளிகாட்டி பெரும் வரவேற்பை பெற்றதுதான் ரகுமானின் சக்சஸ்.
இரவில் தூங்குவதற்கான பாடல்கள் மட்டுமல்லாமல் படத்திற்கு தகுந்தாற்போல் வெஸ்டர்ன் இசையை சேர்த்து கொண்டே வருவார் . சிறுவர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் குத்தாட்டம் போடும் பாடல்களையும் அவ்வபோது வழங்கி வருகிறார். அதன் முயற்சியாகத்தான் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் பல புதிய இசைகளை சேர்த்து ஜெய் ஹோ என்னும் பாடலை வெளியிட்டு ஆஸ்கர் விருதை பெற்றார்.
தற்பொழுது ஏ ஆர் ரகுமான் புதியதாக 15 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கண்டிப்பாக 15 படங்களில் ஒரு 5 படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தால் அவரின் விருது எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பது உண்மை. இதற்கு காரணம் அவருடைய தன்னடக்கம். ஆனால் பல இசையமைப்பாளரிடம் மிஸ்ஸிங்.