சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு படங்களுக்கு இசை அமைக்கிறார் என மற்ற இசையமைப்பாளர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சுற்றி சுற்றி வேலை பார்க்கிறார் அனிருத்.
மேலும் அனிருத்தின் கால்ஷீட்டுக்காக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் காத்திருக்கின்றனர். மேலும் அனிருத் பல படங்களை கைவசம் வைத்து உள்ளதால் உடனே படத்தை முடித்து கொடுக்க முடியாத சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் சில காலமாக அனிருத் மீது சில நெகட்டிவ் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட், காத்துவாக்குல 2 காதல், விக்ரம், டான், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது தவிர நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் படத்திற்கும் அனிருத் தான் இசை அமைக்கிறார்.
ஆனால் ஏ ஆர் ரகுமான் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பார். அந்தப் பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும். ஆனால் தற்போது ஏ ஆர் ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயனின் அயலான், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பத்து தல, வெந்து தணிந்தது காடு மற்றும் பார்த்திபன் புது முயற்சிக்காக ஒரே ஷாட்டில் எடுத்துள்ள இரவின் நிழல் படத்திற்கும் ஏஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார்.
இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அனிருத்துக்கு சவால் விடும் விதமாக ஏ ஆர் ரகுமான் பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். ஆஸ்கர் நாயகனுக்கு இதெல்லாம் ஜுஜுபி என அசால்ட் பண்ணி வருகிறார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.