ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

64 பேரில் இசைப்புயல் பின் தொடரும் ஒரே ஒரு சீரியல் நடிகை.. யார் அந்த லக்கி லேடி தெரியுமா.?

இந்திய சினிமாவின் ஆஸ்கார் நாயகன் என்ற புகழுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்களின் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் இளைஞர்களின் மனதை வருடிக் கொண்டிருக்கிறது.

எனவே அவர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் 64 நபர்களில் சன் டிவி சீரியல் நடிகையும் ஒருவர் என்ற விஷயம் தற்போது அவருடைய ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லாவை சுமார் 61 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அதிலே ஏஆர் ரகுமானும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கேப்ரில்லா, சுந்தரி சீரியலில் நடிப்பதற்கு முன்பே விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். அதன் பிறகு ஏகப்பட்ட ஷார்ட் ஃபிலிம்களிலும், டிக்டோக் மூலமும் தன்னுடைய இனிமையான தமிழ் பேசினாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றவர்.

அத்துடன் இவர் ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலுக்காக ஏஆர் ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார். அப்போது கேப்ரில்லா மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏஆர் ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம் வைரலானது.

இவ்வாறு கேப்ரில்லா மற்றும் ஏஆர் ரகுமான் இருவரின் இடையே உள்ள தமிழ் பற்றினாள் சோசியல் மீடியாவிலும் ஒருவரை ஒருவர் பின்பற்றுவது தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Trending News