புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அடுத்த Oscar விருதுக்கு ரெடியாகும் ஏ.ஆ.ரஹ்மான்.. Slumdog மில்லியனர் 2

ஸ்லம்டாக் மில்லியனார் 2 வது பாகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய படம் ஸ்லம்டாம் மில்லியனார். 2009 ஆம் ஆண்டு வெளியானது இப்படம்.

இதில், தேவ் படேல், பிரீடா பிண்ட்டோ, அனில் கபூர், இர்பான் கான் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

இப்படத்தின் இயக்குனர், ஒலி அமைப்பு, எடிட்டிங்கிற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்புக்கும், அவரது இசையமைப்பில் உருவான ஜெய்ஹோ பாடலுக்கும் 2 ஆஸ்கர் விருதுகள் என கிடைத்தன.

அதன்பின் ஆஸ்கர் தமிழர், ஆஸ்கர் நாயகன் என ஏ.ஆ.ரஹ்மான் அழைப்பட்டு வருகிறார்.

மீண்டும் ஆஸ்கர் விருதுகளை வெல்லுமா ஸ்லம்டாக் மில்லியனார் 2?

இப்படம் மும்பையில் ஒரு பகுதியில் வசிக்கும் சிறுவன், தன் வறுமையிலும், கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் கோடீஸ்வரனாகும் கதை.

இப்படத்தின் சுவாரஸ்மான திரைக்கதை அனைவருக்கும் பிடித்தது. ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டியது. இதன் 2 வது பாகம் வெளியாகுமா? என ரசிகர்கள் கேட்டனர்.

ஸ்லம்டாக் மில்லியனார் படத்தின் 2 வது பாகம் & தொலைக்காட்சி ரைட்ஸை லாஸ் ஏஞ்சல்ஸை ஏர்ந்த பிரிட்ஜ் 7 என்ற நிறுவனம் சார்பில் ஸ்வாதி ரெட்டி, கிராண்ட் கெஸ்மேன் பெற்றுள்ளனர்.

அதனால் ஸ்லம் டாக் மில்லியனார் படம் விரைவில் உருவாகலாம் என கூறப்படுகிறது. இப்பட த்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என தெரிகிறது.

அது உறுதியாகும் பட்சத்தில் அவர் 2 வது முறை ஆஸ்கர் விருது பெற வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News