வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒருவேளை இதுவும் அப்படி இருக்குமோ? விவாகரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்மதம் இல்லை?

இசை புயலின் மனைவி விவாகரத்து அறிவித்ததில் இந்திய சினிமா துறையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஏன் என்றால், காதலை பாடல் மூலம் உணரச்செய்யும் இசை புயல், மேடைகளில் அவரது மனைவியோடு வரும்போது, அவ்வளவு அக்கறையோடும் அன்போடும் அழைத்து வருவார். இந்த தம்பதிகள் தற்போது 29 ஆண்டுகள் கழித்து பிரியமுற்பட்டது, காதல் மேல் இருக்கும் நம்பிக்கையை துண்டு துண்டாக உடைக்கும் வகையில் தான் உள்ளது.

இது தொடர்பாக சாய்ரா பானு கூறியது, “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு இது” என்றும் கூறியிருந்தார்.

இது பார்த்த பலருக்கு, அப்படி என்ன இவர்களுக்குள் பிரச்சனை.. என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில், இசை புயல், அவர் மனைவி, பிள்ளைகள் என்று எல்லோரும், எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் என்று கேட்டிருந்தனர்.

விவாகரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்மதம் இல்லை?

தற்போது, ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த விவாகரத்தில் சம்மதம் இல்லையோ என்ற ஒரு கேள்வி வந்துள்ளது. ஏன் என்றால், அவர் போட்ட போஸ்ட் அப்படி.. தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பினேன், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தான் இதும் சாய்ரா பானு தன்னிச்சையாக எடுத்த முடிவாக இருக்குமோ என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டில், ஏ.ஆர். ரஹ்மான் இதை சற்றும் எதிர்பாராததை போல் போட்டிருந்தார். மேலும் அவருக்கு இதில் வலி அதிகம் என்பதை உணர்த்தும் வகையில், அந்த போஸ்ட் இருந்தது. இதை தொடர்ந்து இவர்கள், பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் இறைவனை வேண்டி வருகிறார்கள்.

உண்மையில் சினிமா துறைக்கு என்ன தான் ஆயிற்று.. காதலை உணரச்செய்தவர்களே, அந்த உணர்வை வெட்டி எரியும்படியான செயல்களில் ஈடுபடும்போது, உறவுகள் மீது இருக்கும் நம்பிக்கையே போய் விடுகிறது.

Trending News