வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

உடைந்த கண்ணாடியான காவிய காதல்.. ஏ.ஆர். ரஹ்மான் அவர் மனைவி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

திருமணமாகி 29 வருடங்கள் ஆன பிறகு விவாகரத்து செய்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு தெரிவித்தது, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு குடும்பத்தினருடன் கலந்துரையாடி எடுத்த முடிவா என்பதே சந்தேகம் தான். ஏன் என்றால், இதில் ரஹ்மானுக்கு துளி கூட விருப்பமில்லை என்பதை இலை மறை காய் மறையாக கூறியிருக்கிறார் ரஹ்மான்.

இந்த நிலையில், ஆரம்பத்தில் இவர்கள் காதல் எப்படி துவங்கியது என்பதை பற்றி ரஹ்மான் கூறிய விடியோக்கள் எல்லாம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரையும் குடும்பத்தார் தான் பார்த்து சேர்த்து வைத்தார்கள். 12 மார்ச் 1995இல் சாய்ரா பானுவை மணந்தார் ஏ.ஆர்.ரகுமான். முதன்முதலில், சாய்ராவை குடும்ப மருமகளாக தேர்வு செய்தது, ரஹ்மானின், தாயும் தமக்கையும் தான். அதன் பிறகு தான் அவர் சந்தித்த்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் அவர் மனைவி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

இந்த நிலையில், ஆரம்ப காலத்தில், இவர் தனது மனைவி பற்றி சொன்ன விஷயங்களை தற்போது வைரல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள், ஏ.ஆர். ரஹ்மான் அவர் மனைவி பற்று என்ன சொன்னார் தெரியுமா? “சாய்ரா, அழகாகவும் அதேநேரம் அமைதியாகவும் இருந்தார். எனது 28வது பிறந்த நாள் அன்று நாங்கள் முதல் முறையாக சந்தித்தோம். அது ஒரு சிறிய சந்திப்பு, அதன் பிறகு, நாங்கள் பெரும்பாலும் தொலைபேசியில் தான் பேசிக்கொண்டோம்”

” அப்போது அவருக்கு கட்ச் மொழியும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்தது. அதனால், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று ஆங்கிலத்தில் சாய்ராவிடம் கேட்டேன். அப்போது, ​​அவர் மிகவும் அமைதியாக இருந்தார். அவரது குடும்பத்தினரிடம் தான் என்னை பிடித்திருக்கிறது என்றே கூறினார். என்னிடம் நேரடியாக கூறவில்லை..” என்று கூறியிருந்தார்.

இந்த தம்பதி பெரிதாக வெளியில் ஒன்றாக உலா வரவில்லை என்றாலும் கூட, வரும் நிகழ்ச்சிகளில் அழகாக அன்பை பரிமாறி கொண்டனர். அடுத்தடுத்து நடக்கும் விவாகரத்து, கல்யாணமே வேண்டாம் போங்க டா.. பிரேக் அப் வலியவே தாங்கமுடியல… இதெல்லாம் சத்தியமா முடியாது என்று ஜென் ஜி கிட்ஸ் தற்போது கூறிவருகின்றனர்.

Trending News