ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரொம்ப டார்ச்சர் பண்ணோம்.. உண்மையை ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் ரத்த சொந்தம்

29 ஆண்டு கால திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் சாய்ரா பானு. இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கே தெரியாது என்று பலர் தற்போது கூற ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில், ஒரு சில உண்மைகளை ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி உடைத்து கூறி இருந்தார். அந்த பழைய பேட்டி, தற்போது வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹைனா பல வருடங்களுக்கு முன் கொடுத்த அந்த பேட்டி தான் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது. அதில், “அவங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். அதுனால் ரஹ்மானோட எல்லா ட்ரெஸையும் அவங்க தான் செலக்ட் பண்ணுவாங்க.”

“எனக்கு அவங்கள பிடிக்கும். ஒரு விதத்துல அவங்க ரொம்ப பயங்கரமான போல்ட் லேடி. அவங்களுக்கு எங்க வீட்டு சைடுல இருந்து ரொம்ப விமர்சனம் செய்வாங்க.. ஆனால் அதை பற்றி எல்லாம் ரஹ்மானிடம் complaint செய்து கொண்டில்லாமல், அனைத்தையும் தனியாக handle செய்தார்..” என்று கூறியுள்ளார்.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில்,”மற்றவர்களை போல நாம் ஒன்றாக ஷாப்பிங் செல்லவோ, ஊர் சுற்றவோ முடியாது. வெளியில் செல்ல முடியாது. இதனால் அவர் மிகவும் விரக்தி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில், இந்த விவகாரத்திற்கு, அவர் அனுபவித்த தனிமையே காரணம். யாரும் இல்லாமல் தனியாக இருப்பதை விட, எல்லோரும் இருந்து தனிமையை அனுபவிப்பது மிகவும் கொடியது.

“இது வேளையில் பிசியாக இருக்கும் பல ஆண்கள் வயிற்றில் தற்போது புளியை கரைத்துள்ளது. ஆரம்பத்தில், தங்கமே செல்லமே என்று அழைப்பவர்கள், பிற்காலத்தில், உன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் சோத்துக்கு சிங்கி தான் அடிக்க வேண்டும் ” என்று கூறுவார்கள். இந்த ஞானம் ஏன் ஆரம்பத்தில் இல்லை என்று தான் தெரியவில்லை.

Trending News