வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தமிழ் சினிமா பக்கமே வர மறுக்கும் இசைப்புயல்.. ஏ ஆர் ரகுமானையும் விட்டுவைக்காத சூழ்ச்சி

கடந்த 25 வருடங்களாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிப்போட்டவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். இவர் மேற்கத்திய இசையை நம் நாட்டவர் கேட்டுக் கொண்டிருந்ததை மாற்றி தன் திறமையால் நமது பாரம்பரிய இசைக் கருவிகளின் மூலம் இசையமைத்து உலகம் முழுவதும் பரவச் செய்தவர்.

மேலும் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் ஏஆர் ரகுமான், தமிழ்நாட்டுப் பக்கமே வர மறுக்கிறார். படம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஜூம் (zoom) காலில் பேசவேண்டியதாக இருக்கிறது.

அதனால் அனைத்து வேலைகளும் தாமதம் ஆகிறது. நிறைய படங்கள் கையில் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். தற்போது மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா போன்ற படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

கோப்ரா படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரகுமான் ஜூலை 2019ல் ஒப்புக்கொண்ட பிறகு, பான்இந்தியா படமாக ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 2020 ஆம் ஆண்டு கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால் படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் காலதாமதம் ஏற்பட்டாலும், கோப்ரா ரிலீஸ் தாமதமாவதற்கு கூட ஏ ஆர் ரகுமான் தான் காரணம் என்று இவர் மேல் பழிபோட்டு வருகின்றனர். ஏற்கனவே இதே போல் புகார் அனிருத் மீதும் வைக்கப்பட்டிருக்கிறது .

இரண்டு வருடங்களாக கோப்ரா படத்தின் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. கடைசியாக ஆகஸ்ட் 31 சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் வராது இன்னும் வேலைகள் VFX வேலை இருக்கிறது. அதனால் இதுவும் இழுத்துக் கொண்டே போகும் என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த சூழ்ச்சியில் ஏஆர் ரகுமானை மாட்டி விட்டுள்ளனர்.

Trending News