திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்தினம் பட கதையைக் கேட்டு அடம்பிடித்த ஏஆர் ரகுமான்.. புது மேஜிக் செய்ய காத்திருக்கும் மும்மூர்த்திகள்

Music Director AR Rahman: 90களில் இருந்து உன்னதமான காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்தினம், சமீபத்தில் தன்னுடைய திரை கனவான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக அவர் இயக்கக்கூடிய படத்தின் கதையைக் கேட்டதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் பிரமித்து போய் உள்ளார்.

மணிரத்தினம் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்குவதால், அதற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் தற்போது தயார் செய்து விட்டார். இப்போது கமல், மணிரத்தினம், ஏஆர் ரகுமான் மூன்று பேருமே அமெரிக்காவில் தான் இருந்து வருகிறார்கள்.

Also Read: உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்..கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

கமல் இந்தியன் 2 பட வேலையிலும் பிசியாக இருக்கிறார். அதே போல் அடுத்து மணிரத்தினம் படத்தில் நடிப்பதால் அவர்களையும் அமெரிக்கா வரவழைத்து அந்த படத்தின் கதை விவாதத்திலும் ஈடுபட்டு இருக்கிறார். இந்த படத்தின் கதையை மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானிடம் கூறியதும் இசை புயல் அதிர்ந்து போய் உள்ளார்.

‘சார் இப்படி ஒரு கதையா!’ என்று கேட்டுள்ளார். இந்த கதையில் கமல் உடன் நான் கண்டிப்பாக இருக்க வேண்டும், என்னோட முழு உழைப்பையும் கொடுத்து, இந்த படத்தை புது மேஜிக் மாதிரி கொடுக்கணும். அந்த அளவிற்கு கதையை பற்றி ஏஆர் ரகுமான் பேசி உள்ளார். கண்டிப்பாக இந்த படத்தில் நான் இருப்பேன் என்றும் அடம் பிடித்துள்ளார்.

Also Read: தனித்துவமான டைட்டிலை பெற்ற 6 நடிகர்கள்.. கமலுக்கு உலகநாயகன் என பெயர் வைத்தது யார் தெரியுமா?

அதன் பின் காட்பாதர் படத்தை விசாரித்து அந்த படத்தையும் பார்த்துள்ளனர். கூடிய விரைவில் இந்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு வெளிவரும். நாயகன் படத்திற்க்கு பிறகு கமல்- மணிரத்தினம் கூட்டணி 35 வருடங்களுக்குப் பிறகு இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக இருக்கிறது

இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் உலகநாயகன்- ஆஸ்கார் நாயகன்- மணிரத்தினம் போன்ற மும்மூர்த்திகளும் இணைந்து புதுவிதமான மேஜிக்கை செய்ய காத்திருக்கின்றனர்.

Also Read: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

Trending News