திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தன் சாவுக்கு தானே ஒப்பாரி பாடல் பாடிய நடிகர்.. நல்ல பாட்டை வேஸ்ட் செய்த ஏ ஆர் ரகுமான்

ஏ ஆர் ரகுமானின் இசைக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மெலடி பாடல்களில் இருந்து குத்தாட்ட பாடல், சோக பாடல் என வெரைட்டி காட்டுவதில் அவருக்கு நிகர் அவர் தான். அந்த வகையில் தற்போது அவர் இசையமைத்துள்ள ஒரு படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டை அவர் வேஸ்ட் செய்துள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதில் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் வடிவேலு நடித்திருக்கிறார். இதை செல்லும் இடத்தில் எல்லாம் கூறி வரும் இயக்குனர் வைகை புயலுக்கு புகழாரம் சூடி படத்தை ப்ரமோஷன் செய்து வருகிறார்.

Also read: மனைவியை ஒதுக்கி வைக்க இதுதான் காரணம்.. வடிவேலுவின் அந்தரங்க விஷயத்தை வெளியிட்ட பிரபலம்

அதைத்தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பும் இப்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பட குழு சில தினங்களுக்கு முன்பு வடிவேலுவின் குரலில் உருவாகி இருந்த பாடலை வெளியிட்டு இருந்தது. இதை சிலர் பாராட்டி வந்தாலும் ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் இருந்து வருகிறது.

அதாவது ஒப்பாரி பாடலாக உருவாகி இருக்கும் அந்தப் பாட்டை வேறு யாராவது பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனென்றால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்டா வரச் சொல்லுங்க என்ற பாடல் மிகப்பெரும் எழுச்சியாக இருந்தது.

Also read: நாறிப்போன வடிவேலுவின் பெயர்.. மாமன்னனை காப்பாற்ற உதயநிதி எடுத்திருக்கும் முடிவு

அந்த அளவுக்கு இப்பாடல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் வடிவேலுவை பாட வைத்து ஏ ஆர் ரகுமான் பாட்டை வேஸ்ட் செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் வடிவேலு தான் இந்த பாட்டை பாட வேண்டும் என்பது இயக்குனரின் ஆசையாம். ஏனென்றால் இப்படத்தில் அவர் இறந்து விடுவாராம்.

அந்த வகையில் அவருடைய இறப்பிற்கு அவர் குரலிலேயே ஒப்பாரி பாடல் பாடினால் நன்றாக இருக்குமே என்று இயக்குனர் யோசித்திருக்கிறார். அதன் பிறகு தான் வடிவேலு இந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார். இருப்பினும் இது பற்றி சில கருத்துக்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அவை எல்லாம் படத்தை பார்த்தால் மறைந்து விடும் என இயக்குனர் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறாராம்.

Also read: வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்

Trending News