வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சாவு பயத்தை காட்டிய ஏ ஆர் ரகுமான்.. அனிருத்துக்கு இருக்கும் அறிவு கூட உங்களுக்கு இல்லையா.?

A.R.Rahman: இசை புயல் ஏ ஆர் ரகுமானின் பெயர் இப்போது மொத்தமாக டேமேஜ் ஆகி இருக்கிறது. அந்த அளவுக்கு நேற்று நடந்த ஒரு சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுவே சோசியல் மீடியாவில் அவர் மீதான விமர்சனங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

அதாவது நேற்று ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி பனையூரில் நடைபெற்றது. ஏற்கனவே ஒரு முறை இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மழை காரணமாக நிறுத்தப்பட்டது. அதை அடுத்து ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Also read: இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

இதுவரை எந்த இசை நிகழ்ச்சியிலும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது கிடையாது. அந்த அளவுக்கு நேற்று ஏ ஆர் ரகுமானின் இசை மழையில் நனைய சென்ற ரசிகர்கள் கடும் அவதிப்பட்டு இருக்கின்றனர். அதாவது 30,000 நபர்கள் மட்டுமே அமரும்படியான இடத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.

ஏ ஆர் ரகுமானை பார்க்க வேண்டும் என்பதற்காகவே 25 ஆயிரம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி சென்ற ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அந்த இடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து இருக்கிறது.

Also read: டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

இதைவிட கொடுமை என்னவென்றால் அங்கு ஏற்பட்ட தள்ளு முள்ளில் பலருக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. சிலர் உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் நிகழ்ச்சியை பார்க்காமலேயே வெளியேறி இருக்கின்றனர். அந்த அளவுக்கு ஏ ஆர் ரகுமான் தன்னை தேடி வந்த ரசிகர்களுக்கு சாவு பயத்தை காட்டி இருக்கிறார்.

இதைத்தான் தற்போது பலரும் சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். அனிருத் கூட வருடத்திற்கு நான்கு, ஐந்து இசை கச்சேரிகளை நடத்துகிறார். ஆனால் ஒரு முறை கூட இது போன்ற சம்பவம் நடந்ததே கிடையாது. அவருக்கு இருக்கும் அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று ஏ ஆர் ரகுமானை பலரும் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

Also read: உயிர் போற நிலையில் கச்சேரி நடத்திய ஏஆர் ரகுமான்.. ஓரு டிக்கெட் 5000 கொடுத்தும் சந்தி சிரித்த சம்பவம்

Trending News